என்னாங்க இந்திய பிட்ச் மாதிரி இருக்கு? 2 விக்கெட்ஸ் தானே.. சாக்கு சொன்ன ஸ்டோக்ஸ்.. ஆகாஷ் சோப்ரா கேள்வி

Ben Stokes
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா பரிதாபமான உலக சாதனை படைத்தது. ஆனால் அதற்கும் சேர்த்து 2வது போட்டியில் இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்த இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

அதனால் சுப்மன் கில் தலைமையில் தொடரை சமன் செய்த இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து அசத்தியுள்ளது. மறுபுறம் பஸ்பால் என்ற பெயரில் எந்த இலக்கைக் கொடுத்தாலும் சேசிங் செய்வோம் என்று சொன்ன இங்கிலாந்து சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது. இந்நிலையில் பர்மிங்காம் பிட்ச் தாங்கள் நினைத்தது போல் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

- Advertisement -

இந்திய பிட்ச் மாதிரி:

சொல்லப்போனால் அது நாட்கள் செல்ல செல்ல இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் பிட்ச் போல மாறியதாக ஸ்டோக்ஸ் தெரிவித்தார். இது பற்றி போட்டியின் முடிவில் பிபிசி தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அது துணைக் கண்டத்தின் பிட்ச் போல போட்டியை மிகவும் ஆழமாக எடுத்துச் சென்றது”

“ஆரம்பத்தில் அது வழக்கம் போல இருந்தது. அதைப் பயன்படுத்தி நாங்கள் இந்தியாவை (211/5 என) மடக்கிப் பிடித்தோம். அது ஆழமாக செல்லும் போது எங்களால் வேகமாக ரன்கள் அடிப்பது கடினமாக மாறியது. அது இந்திய அணி விளையாடிப் பழகிய சூழ்நிலைகளாகும். எனவே அவர்களுக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும்” எனக் கூறினார்.

- Advertisement -

வெறும் 2 விக்கெட்ஸ்:

அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் சொந்த மண்ணில் தோற்று விட்டு பிட்ச்சை சாக்காக சொல்கிறீர்களா? என்று அவருக்கு பதிலடி கொடுத்தார்கள். குறிப்பாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பர்மிங்காம் பிட்ச்சில் இந்திய ஸ்பின்னர்கள் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்ததாக பதிலடி கொடுத்தார். ஏனெனில் இந்திய துணைக் கண்டங்களில் இருக்கும் பிட்ச்கள் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.

இதையும் படிங்க: அவரு ஆடுறத பாத்து கத்துக்கோங்க.. சுப்மன் கில்லை உதாரணம் காட்டி இங்கிலாந்து வீரரை விளாசிய – மைக்கல் வாகன்

எனவே பர்மிங்காம் பிட்ச் எப்படி துணைக் கண்டத்தை பிட்ச்சை போல இருக்கும்? என்று அவருக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி பென் ஸ்டோக்ஸ் பேசிய பிபிசி வீடியோ பக்கத்தை டேக் செய்து அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “2 இன்னிங்சிலும் இந்திய ஸ்பின்னர்கள் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்கள். அப்படியிருந்தும் அது துணை கண்ட பிட்ச் போல இருந்தது என்று சொல்வது சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.

Advertisement