அவரு ஆடுறத பாத்து கத்துக்கோங்க.. சுப்மன் கில்லை உதாரணம் காட்டி இங்கிலாந்து வீரரை விளாசிய – மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை வெற்றிகரமாக துவங்கியது.

சுப்மன் கில்லை பாத்து கத்துக்கோங்க : மைக்கல் வாகன் விமர்சனம்

இதன் காரணமாக ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்த இங்கிலாந்து அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

அதன் காரணமாக இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜாக் கிராவ்லியை இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுடன் ஒப்பிட்டு முன்னாள் இங்கிலாந்து கேப்டனான மைக்கல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்காக ஜாக் கிராவ்லி விளையாடுவது ஒரு அதிர்ஷ்டம் தான். ஏனெனில் 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 31 ரன்கள் சராசரியுடன் 5 சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். 42 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இப்படி ஒரு துவக்க வீரர் விளையாடுவது சரியானது கிடையாது.

- Advertisement -

இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக சுப்மன் கில் 35 ரன்கள் சராசரியுடன் இங்கு வந்தார். ஆனால் தற்போது 4 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவருடைய சராசரி 42-ஆக உயர்ந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்ட சுப்மன் கில் விட வேண்டிய பந்துகளை விட்டும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடுகிறார்.

இதையும் படிங்க : ஆகாஷ் தீப் பவுலிங் பண்ணும் போதெல்லாம் இதை மட்டும் தான் சொன்னேன்.. அவர் அசத்திட்டார் – முகமது சிராஜ் பேட்டி

அதன்காரணமாகவே அவரால் நீண்ட இன்னிங்க்ஸை அவரால் விளையாட முடிகிறது. அதேபோன்று ஜாக் கிராவ்லியும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். ஒரு தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடக்கூடாது நிறைய போட்டிகளில் நன்றாக ஆட வேண்டும் என ஜாக் கிராவ்லியை அவர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement