- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சொதப்பும் மிடில் ஆர்டர் – இவரை பினிஷெராக இறக்கினால் எல்லாம் சரி ஆகிடும் – சுனில் கவாஸ்கர் யோசனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 2 போட்டிகளின் முடிவில் தென்ஆப்பிரிக்கா 2 – 0* என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரின் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்தியா நேற்று நடந்த 2வது போட்டியில் மீண்டும் பரிதாப தோல்வியடைந்தது.

முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் தோல்வி அடைந்த இந்தியா தற்போது மீண்டும் அதே அனுபவம் இல்லாத தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மண்ணைக்கவ்வி ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது இந்திய ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

- Advertisement -

பேட்டிங் மோசம்:
இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து தோல்வி அடைய மோசமான பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக தொடக்க வீரர்கள் பொறுப்புடன் பேட்டிங் செய்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அதை மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக தவறவிட்டது இந்தியாவிற்கு தோல்வியை ஏற்படுத்தியது.

இந்தியா தோல்வி அடைந்த போதிலும் இந்த தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு ரன்களை எடுத்து வருகிறார். குறிப்பாக 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 64/2 என தடுமாறிய போது 4வது இடத்தில் களமிறங்கிய அவர் வெறும் 71 பந்துகளில் 85 ரன்களை விளாசி இந்தியா 287 ரன்களை எடுக்க உதவினார்.

- Advertisement -

பினிஷெர் பண்ட்:
இந்நிலையில் ரிஷப் பண்ட்டை 4வது இடத்தில் விளையாட வைக்காமல் 6வது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தி ஒன்றில் அவர்,

“விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்த பின்னர் அது மிடில் ஆர்டரில் விளையாடும் ரிஷப் பண்ட் மற்றும் 2 ஐயர்களால் (ஷ்ரேயஸ் & வெங்கடேஷ்) வீணானது. சமீப காலங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 4வது இடத்தில் விளையாட வைக்கப்படுகிறார். ஆனால் அந்த இடத்தில் அவரால் பொறுமையாகவும் அதிரடியாகவும் கலந்து விளையாட முடியவில்லை. எனவே 6வது அவரை களமிறக்கி ஒரு பினிஷெராக பயன்படுத்துவது நல்ல முடிவாக இருக்கும்.

- Advertisement -

அந்த சமயத்தில் பேட்டை சுழற்றி திடீரென அவுட் ஆனாலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார். களமிறங்கும் அனைத்துப் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் ரன்கள் அடிக்காவிட்டாலும் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் ரன்கள் அடித்து வருகிறார்.

அத்துடன் எந்த வகையான போட்டியாக இருந்தாலும் அவர் தனக்கே உரித்தான பாணியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் திறமையை கொண்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை 4வது இடத்தில் பயன்படுத்தாமல் 6வது இடத்தில் பயன்படுத்தினால் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து பினிஷராக இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றுவார் என சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 3 ஆவது போட்டியிலாவது இந்தியா ஜெயிக்கணுனா இவங்க 3 பேரையும் தூக்கியே ஆகனும் – கம்பீர் ஓபன்டாக்

ஏற்கனவே இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்புவதுடன் ஒரு நிலையான நல்ல பினிஷெர் இல்லாமல் இந்தியாவின் பேட்டிங் தடுமாறி வருகிறது. எனவே கவாஸ்கர் கூறுவது போல ரிஷப் பண்ட் பேட்டிங் இடத்தை மாற்றி 6வது இடத்தில் விளையாட வைத்தால் தள்ளாடும் மிடில் ஆர்டர் சரியாகவும் வாய்ப்புள்ளது. அத்துடன் இந்தியாவிற்கு புதிய பினிசர் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -
Published by