3 ஆவது போட்டியிலாவது இந்தியா ஜெயிக்கணுனா இவங்க 3 பேரையும் தூக்கியே ஆகனும் – கம்பீர் ஓபன்டாக்

gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி நாளை கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி தங்களது 2வது போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள மூன்றாவது போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

pant4

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி நாளைய 3-வது ஒருநாள் போட்டியில் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி தோற்றுவிட்டது. இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் அணியின் பெஞ்ச் பலத்தை சோதிக்க வேண்டும்.

அந்த வகையில் சீனியர் வீரர்களான பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் அஷ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளித்து விட்டு அவர்களுக்கு பதிலாக முகமத் சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மற்றபடி பேட்டிங் அதில் எந்தவித மாற்றமும் தேவையில்லை. பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் போன்ற வீரர்கள் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச கூடியவர்கள் என்பதால் நிச்சயம் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு அவர்கள் சிறப்பாக கை கொடுப்பார்கள்.

siraj 2

அதுமட்டுமின்றி இந்திய அணியில் இன்னும் பல வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் புவனேஸ்வர் குமார் முன்புபோல பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக தீபக் சாஹருக்கு இனி தொடர்ச்சியாக அணியில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என கம்பீர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : மிகப்பெரிய சாதனையுடன் ஐ.பி.எல் தொடரிலிருந்து விடைபெற்ற யுனிவர்ஸ் பாஸ் – ஷாக்கிங் நியூஸ் இதோ

இந்திய அணி இனிவரும் தொடர்களில் வெற்றி பெற வேண்டுமெனில் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் இரண்டாம்கட்ட வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை தயார்படுத்தினால் அணியை மேலும் பலப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது தற்போது ஒருநாள் தொடரையும் இழுந்துள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement