மிகப்பெரிய சாதனையுடன் ஐ.பி.எல் தொடரிலிருந்து விடைபெற்ற யுனிவர்ஸ் பாஸ் – ஷாக்கிங் நியூஸ் இதோ

Gayle
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த சீசனில் புதியதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் 2 நாட்கள் பெங்களூரு நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்பாக சென்னை, மும்பை உள்ளிட்ட பழைய 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களையும் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களையும் முதற்கட்டமாக தேர்வு செய்துள்ளன.

Auction

- Advertisement -

முதல் முறையாக கெயில் இல்லை:
இதை அடுத்து நடைபெறும் மெகா ஏலத்தில் பங்கேற்க இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 1214 வீரர்கள் தேர்வு செய்து போட்டி போட உள்ளார்கள். இதில் வெளிநாடுகளில் இருந்து 318 வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள்.

அத்துடன் அதிரடி வீரர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலிருந்து 41 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். ஆனால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த “வெஸ்ட் இண்டீசின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பெயர்” இந்த பட்டியலில் இடம் பெறாதது ஐபிஎல் ரசிகர்களை சோகம் அடையச் செய்துள்ளது.

gayle

ஓய்வு பெற்றார் கெயில் :
இதை அடுத்து 2022 ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் பங்கேற்கப்போவதில்லை என்பதால் ஐபிஎல் தொடரிலிருந்து அவர் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் முறையாகத் தொடங்கியது முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக கிறிஸ் கெயில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் ஜாம்பவான்:
பொதுவாகவே அதிரடிக்கு பெயர் போன கிறிஸ் கெயில் நின்ற இடத்தில் இருந்து எவ்வளவு பெரிய பந்து வீச்சாளராக இருந்தாலும் அசால்டாக சிக்சர்களை பறக்கவிட்டு ரன் மழை பொழிந்து மைதானத்தில் இருக்கும் ரசிகர்களையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் மகிழ்விப்பதில் வல்லவராக திகழ்ந்தார். அதிரடியான பேட்டிங் செய்வதுடன் அவ்வப்போது களத்தில் ஜாலியாக வேடிக்கையான செயல்களில் ஈடுபட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

வரப்பிரசாதம் கெயில்:
1. மொத்தம் 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அதில் 4965 ரன்களைக் குவித்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 8வது மற்றும் 3வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

2. கடந்த 2011 மற்றும் 2012 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பிகளை வென்ற இவர் “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த வருடங்களில் ஆரஞ்சு தொப்பியை வென்ற ஒரே வீரர்” என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

gayle

3. எதிரணிகளை பந்தாடி 6 சதங்களை அடித்துள்ள இவர் “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்” என்ற சரித்திர சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

4. இத்துடன் ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 357 சிக்சர்களை பறக்கவிட்டுள்ள இவர் “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்” என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் வேறு எந்த ஒரு வீரரும் 300 சிக்ஸர்களை கூட தொட்டதே கிடையாது.

Gayle

5. மேலும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை (175* ரன்கள்) பதிவு செய்த அபார சாதனையும் படைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இன்னும் பல பிரம்மாண்ட சாதனைகளையும் படைத்துள்ள கிறிஸ் கெய்ல் ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவான் என்றால் அது மிகையாகாது.

இதையும் படிங்க : புவனேஷ்வர் குமார் கட்டம் முடிஞ்சிடுச்சி. அவருக்கு பதிலா அணியில் இவரை சேருங்க – சுனில் கவாஸ்கர் கருத்து

டி20 கிரிக்கெட்டின் சச்சின்:
தற்போது 42 வயதை கடந்துவிட்ட கிறிஸ் கெயில் ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14321 ரன்களையும், 22 சதங்களையும், 1045 சிக்சர்களையும் விளாசி அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இப்படி ஏராளமான ரன்களுடனும் சாதனைகளுடனும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த “கிறிஸ் கெயிலை டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர்” என அழைத்தால் அதில் எந்த தவறும் இல்லை.

Advertisement