டைமிங்ல கிடைக்கும் அந்த வாய்ப்பை பயன்படுத்துங்க.. திணறும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கவாஸ்கர் அறிவுரை

Sunil Gavaskar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் வென்றது. அதனால் தொடரை சமன் செய்த இந்தியா கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாகவே செயல்பட்டு என்னடாவை ஏற்படுத்தி வருகிறார்கள் வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யாருமே சதமடிக்காத நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 231 ரன்கள் சேஸிங் செய்ய முடியாத பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர். அதே போல இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில் ஜெய்ஸ்வால் 209, 2வது இன்னிங்ஸில் சுப்மன் கில் 104 ரன்கள் அடித்து காப்பாற்றாமல் போயிருந்தால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும்.

- Advertisement -

கவாஸ்கர் அறிவுரை:
ஏனெனில் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் போன்ற மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே சுமாராக விளையாடி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். இந்நிலையில் மூன்றாவது போட்டிக்கு ஒரு வாரத்திற்கும் மேல் இடைவெளி உள்ள நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய தடுமாற்றத்தை சரி செய்ய தற்போது நடைபெற்று வரும் 2024 ரஞ்சிக்கோப்பை நல்ல வாய்ப்பாக இருப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தங்களுடைய ஆட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இப்படி பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடுவது ஒரு தொடர் துவங்குவதற்கு முன்பாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுவது அவசியம் என்பதை காண்பிக்கிறது. உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதால் 5 நாட்கள் நடக்கக்கூடிய டெஸ்ட் போட்டியில் அசத்துவதற்கு தேவையான மனநிலையை வீரர்கள் பெறுவார்கள்”

- Advertisement -

“தற்போது ரஞ்சிக் கோப்பை துவங்கியுள்ளது. அது சில போட்டிகளில் விளையாடி டெஸ்ட் தொடரில் அசத்துவதற்கான நல்ல டைமிங்கை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல மூன்றாவது போட்டிக்கு 10 நாள் இடைவெளி இருப்பதால் அதை பயன்படுத்தி பயிற்சி எடுப்பதற்காக இங்கிலாந்து அணியினர் இந்தியாவை விட்டு வெளியேறி அபுதாபிக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: தோனி என் பாக்கெட்டில் இருக்காரு.. கலாய்த்த பீட்டர்சன்.. ஜஹீர் கான் சுவாரஸ்சிய பதிலடி

அந்த சூழ்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடினால் கண்டிப்பாக ஃபார்முக்கு திரும்ப நல்ல வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் போன்றவர்கள் தற்சமயத்தில் ரன்கள் குவிக்க தடுமாறுவதால் உள்ளூர் தொடரில் விளையாடுவது அவசியமானதாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டியில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement