தோனி என் பாக்கெட்டில் இருக்காரு.. கலாய்த்த பீட்டர்சன்.. ஜஹீர் கான் சுவாரஸ்சிய பதிலடி

Kevin Pieterson 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இத்தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது முன்னாள் இந்திய கேப்டன் தோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக சக வர்ணனையாளர் ஜாகிர் கானிடம் அவர் ஜாலியாக வம்பிழுத்தார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜகீர் கான் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

பாக்கெட்டில் தோனி:
இது பற்றி அவர்கள் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பு பின்வருமாறு:
கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான மகேந்திர சிங் தோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.
ஜஹீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் பேசினார்.

கெவின் பீட்டர்சன்: ஆம் எனக்கு தெரியும். நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.
ஜஹீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.
கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

- Advertisement -

(தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

இதையும் படிங்க: அஸ்வினை முந்திய பும்ரா.. 3 வகையான கிரிக்கெட்டின் கில்லியாக யாருமே படைக்காத தனித்துவ உலக சாதனை

என்று பேசினார்கள். முன்னதாக ஜகீர் கான் கூறுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சனை இந்தியாவின் யுவராஜ் சிங் 5 முறை அவுடடாக்கியுள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் போட்டிகளில் கெவின் பீட்டர்சனை அதிக முறை அவுட் செய்த பவுலர் என்ற பெருமையையும் யுவராஜ் சிங் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement