அஸ்வினை முந்திய பும்ரா.. 3 வகையான கிரிக்கெட்டின் கில்லியாக யாருமே படைக்காத தனித்துவ உலக சாதனை

Jasprit Bumrah 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வென்ற இந்தியா தக்க பதிலடி கொடுத்து தொடரையும் சமன் செய்துள்ளது. அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 209 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்களும் விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

ஆனால் அவர்களை விட தேவைப்படும் நேரங்களில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து மொத்தமாக 9 விக்கெட்டுகள் சாய்த்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட காரணத்தால் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். வித்தியாசமான ஆக்சனை கொண்டு எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அவர் ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முதன்மை பவுலராக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

மாபெரும் உலக சாதனை:
அந்த வரிசையில் இத்தொடரின் முதல் போட்டியில் 196 ரன்கள் குவித்து தோல்வியை கொடுத்த ஓலி போப்பின் 3 ஸ்டம்ப்களையும் பறக்க விட்டு போல்ட்டாக்கிய பும்ரா கேப்டன் பென் ஸ்டோக்ஸை கிளீன் போல்ட்டாக்கியது ரசிகர்களை புல்லரிக்க வைத்தது. குறிப்பாக அவருடைய வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாத பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய கையிலிருந்த பேட்டைக்கு கீழே விட்டு நிராயுதபாணியாக நின்றது மறக்க முடியாததாக அமைந்தது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய அப்டேட் செய்யப்பட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பவுலர்களுக்கான தரவரிசையில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளியுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் புதிய நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2வது போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய அஸ்வின் தற்போது முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு (841) சென்றுள்ளார். ஆனால் அவரை விட அபாரமாக செயல்பட்ட பும்ரா கூடுதல் புள்ளிகளை பெற்று 881 புள்ளிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து சாதித்துள்ளார். இதன் வாயிலாக ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: தொடர்ந்து 5வது ஃபைனல்.. அண்டர்-19 உ.கோ வரலாற்றில் மாஸ் காட்டும் இந்தியா.. 6வது முறையாக சாதிக்குமா?

அத்துடன் ஏற்கனவே தன்னுடைய கேரியரில் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான ஐசிசி பவுலர்களுக்கான தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற தனித்துவமான உலக சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் கபில் தேவ், முரளிதரன், வார்னே உள்ளிட்ட உலகின் வேறு எந்த பவுலரும் தங்களுடைய கேரியரில் 3 வகையான தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை தொட்டதில்லை.

Advertisement