எனக்காக இந்த 2 விஷயத்தை மட்டும் பண்ணுங்க ப்ளீஸ். இந்திய அணிக்கு அன்பு கட்டளையிட்ட – சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

IND vs AUS

- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரையும் இந்திய அணி கைப்பற்றாததால் இம்முறை ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி ஐசிசி தொடர்களை அடுத்தடுத்து கைப்பற்ற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான 50 உலகக் கோப்பை என இரண்டையுமே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டுள்ளார்.

IND

இது குறித்து அவர் கூறுகையில் : எப்பொழுதுமே ஒரு சாம்பியன் அணியில் நீங்கள் இருக்கும் போது உங்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த அணியில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அந்த வகையில் தற்போதைய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் சாம்பியன் அணியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

- Advertisement -

எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலககோப்பை என இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு இடையில் ஆசிய கோப்பையும் வருகிறது அதையும் வெற்றி பெற்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி நிச்சயம் இந்திய அணி இதனை செய்து காட்ட வேண்டும் என்று அவர் அன்பு கட்டளையிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : சீக்கிரம் கிளம்பி பெங்களூருக்கு வாங்க. கேப்டன் பாண்டியாவுக்கு ஆர்டர் போட்ட பி.சி.சி.ஐ – எதற்கு தெரியுமா?

தோனியின் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் உலககோப்பை, 50 ஓவர் உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய வேளையில் அவருக்கு அடுத்து வந்த எந்தவொரு கேப்டனாலும் ஐசிசி தொடரை கைப்பற்ற முடியாத வேளையில் ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணியாவது சாதிக்க வேண்டும் என்பதே அனைவரது ஆசையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement