IND vs AUS : சீக்கிரம் கிளம்பி பெங்களூருக்கு வாங்க. கேப்டன் பாண்டியாவுக்கு ஆர்டர் போட்ட பி.சி.சி.ஐ – எதற்கு தெரியுமா?

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் ஒரு வெற்றியை பெற்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதனால் இந்த இரு போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த தொடரின் முதல் போட்டியில் மட்டும் ரோஹித் தனிப்பட்ட காரணங்களால் விலகி உள்ளதால் அந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்றும் அதனை தொடர்ந்து ரோகித் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hardik-Pandya

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா உட்பட இளம் வீரர்கள் சிலருக்கு பிசிசிஐ பெங்களூருக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏனெனில் தற்போது டெஸ்ட் தொடரில் இடம்பெற்று விளையாடி வரும் வீரர்களில் பலர் நேரடியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள்.

- Advertisement -

அதேவேளையில் டெஸ்ட் தொடரில் விளையாடாமல் ஓய்வில் இருக்கும் வீரர்களான ஹார்டிக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் நீண்ட நாட்களாக போட்டியில் விளையாடாமல் இருப்பதால் பெங்களூரு வந்து பயிற்சி மேற்கொண்டு அதன்பிறகு உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அணியில் இடம் பெறுவார்கள் என்பதனால் இந்த நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெற்றி பெற்றால் போதுமா? டிவில பாக்கும் போது அந்த குறை ஓப்பனா தெரியுது – ரோஹித்தை விமர்சித்த கபில் தேவ்

ஏற்கனவே யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் பெங்களூரு சென்று பயிற்சி பெற்று வரும் வேளையில் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள மற்ற வீரர்கள் பெங்களூர் வந்து உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement