வெற்றி பெற்றால் போதுமா? டிவில பாக்கும் போது அந்த குறை ஓப்பனா தெரியுது – ரோஹித்தை விமர்சித்த கபில் தேவ்

Kapil Dev Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ள இந்தியா 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களை வென்ற முதல் அணியாகவும் அசத்தியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனை படைத்து விடைபெற்ற விராட் கோலிக்கு பின் ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.

Rohit Sharma

- Advertisement -

ஆனால் கடந்த ஒரு வருடமாக பணிச்சுமை மற்றும் காயத்தால் பெரும்பாலும் ஓய்வெடுத்த அவர் முதல் முறையாக இந்த தொடரில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்தி வருகிறார். அதில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வரும் அவர் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் கடினமான பிட்ச்சில் அற்புதமான 120 ரன்கள் குவித்து சதமடித்து சுழலுக்கு சாதகமான மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டினார். மேலும் அந்த இன்னிங்ஸ் ரோகித் சர்மாவை சிறந்த டெஸ்ட் வீரராக அடையாளப்படுத்தியதாக இயன் சேப்பல் போன்ற முன்னாள் வீரர்கள் மனதார பாராட்டினர்.

கபில் தேவ் அதிருப்தி:
அந்த வகையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா தலைமையில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை 4 – 0 (4) என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் என்ன தான் வெற்றி பெற்றாலும் ரோகித் சர்மாவின் ஃபிட்னஸ் சுமாராக இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவருடைய உடல் எடை அதிகமாக இருப்பது தெளிவாக தெரிவதாக கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Rohit-Sharma

“நீங்கள் ஃபிட்டாக இருப்பது மிகவும் முக்கியமாகும். அதிலும் குறிப்பாக கேப்டனாக இருந்து கொண்டு நீங்கள் ஃபிட்டாக இல்லை என்றால் அது மிகப்பெரிய அவமானமாகும். எனவே ரோகித் சர்மா அதில் சற்று கடினமாக உழைக்க வேண்டும். அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ஃபிட்னஸ் பற்றி பேசும் போது அவர் சற்று அதிக எடையுடன் இருப்பது தொலைக்காட்சியில் பார்க்கும் போதே தெளிவாக தெரிகிறது. பொதுவாக நிஜத்தில் ஒருவரை பார்ப்பதற்கும் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்”

- Advertisement -

“ஆனால் எங்கிருந்து பார்த்தாலும் ரோகித் சர்மா சிறந்த வீரர் மற்றும் கேப்டன். இருப்பினும் அவர் ஃபிட்டாக வர வேண்டும். குறிப்பாக விராட் கோலியை நீங்கள் பார்க்கும் போதெல்லாம் இது தான் ஃபிட்னஸ் என்று உங்களுக்கு சொல்லத் தோன்றும்” என்று கூறினார். அவர் இவ்வாறு விமர்சிப்பது முதல் முறையல்ல. 2022ஆம் ஆண்டு சுமாரான ஃபிட்னஸ் காரணமாக அடிக்கடி காயமடைந்து வெளியேறிய ரோகித் சர்மாவால் வரலாற்றில் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

Kapil-Dev

அப்போதே ரோகித் சர்மா சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை ஆனால் உடல் தகுதியில் முன்னேற வேண்டும் என்று கபில் தேவ் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக கேப்டனாக இருக்கும் நீங்கள் இதர வீரர்கள் உத்வேகம் அடையும் அளவுக்கு பிட்டாக இருக்க வேண்டும் என்று நேரடியாக விமர்சித்த கபில் தேவ் மீண்டும் தற்போது அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:IND vs AUS : தந்தையின் இறப்பால் 3 ஆவது போட்டிக்கான அணியில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் – விவரம் இதோ

அப்படி ரோகித் சர்மா ஃபிட்டாக இல்லாத காரணத்தால் சமீப காலங்களில் இதர வீரர்களும் அவரை பார்த்து கெட்டுப் போய் விட்டார்கள் என்றே சொல்லலாம். அதனாலேயே பும்ரா, தீபக் சஹர் போன்ற வீரர்கள் அடிக்கடி காயமடைந்து வெளியேறிய நிலைமையும் மேற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே சமீபத்தில் யோ-யோ டெஸ்ட்டை மீண்டும் பிசிசிஐ கொண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement