இப்டியே இருந்தா ஆசிய கோப்பை கூட ஜெயிக்க முடியாது, அந்த முடிவை எடுங்க – பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்க தவறியது. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அஸ்வின் போன்ற சரியான வீரர்களை தேர்வு செய்யாதது, டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் முதலில் பந்து வீச தீர்மானித்தது போன்ற அம்சங்கள் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. குறிப்பாக சவாலான இங்கிலாந்து மண்ணில் முழுமையாக தயாராமல் ஃபைனலில் களமிறங்கியது தோல்வியை கொடுத்தது.

TEam India

- Advertisement -

ஏனெனில் ஒரு வாரம் முன்பு வரை ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் வெறும் 4 ஓவர்கள் வீசிய இந்திய பவுலர்கள் திடீரென இந்த ஃபைனலில் ஒரே நாளில் 17 ஓவர்கள் வீசியதால் சோர்வடைந்து ரன்களை வாரி வழங்கியிருந்தனர். அதை விட நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என்று கொண்டாடப்படும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகிய 3 நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் யாருமே அரை சதம் கூட அடிக்காமல் கொஞ்சமும் போராடாமல் பெவிலியன் திரும்பியது பேட்டிங் துறையில் தோல்விக்கு முக்கிய காரணமானது.

கவாஸ்கர் சாடல்:
அதிலும் இந்த 3 பேருமே நல்ல துவக்கத்தை பெற்றும் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தேவையற்ற நேரத்தில் தேவையற்ற சுமாரான ஷாட்டை அடித்து தங்களுடைய விக்கெட்டுடன் வெற்றியையும் சேர்த்து பரிசளித்ததே ரசிகர்களை வேதனையில் ஆழ்த்துகிறது. இந்நிலையில் சமீப காலங்களாகவே நட்சத்திர அந்தஸ்தை மட்டும் வைத்து பெரிய தொடர்களில் சொதப்பும் இந்த சீனியர்களை வைத்துக்கொண்டு ஆசிய கோப்பையை தவிர்த்து எதையும் வெல்ல முடியாது என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களை வளர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே உங்களுடைய அணுகுமுறை என்ன என்பதில் உண்மையாக இருக்க வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஏற்ப உங்களுடைய அணுகு முறை இருந்ததா? பேட்டிங் செய்யலாமா அல்லது பந்து வீசலாமா அல்லது எதுவாக இருந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு உங்களுடைய அணுகுமுறை சரியாக இருந்ததா? என்பது போன்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டும்”

- Advertisement -

“இந்த அணியை வைத்துக் கொண்டு நாம் ஆசிய கோப்பையை தவிர்த்து உலகக் கோப்பைகளை வெல்ல முடியாது. அதற்காக ஒருவேளை கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால் தைரியமாக அதை எடுங்கள். ஒருவேளை அந்த முடிவால் புதியவர்கள் வந்து தோல்வியை சந்தித்தாலும் பரவாயில்லை. ஏனெனில் நம்மிடம் இவ்வளவு அனுபவமும் திறமையும் இருந்தும் இனிமேலும் தோல்விக்கு காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க முடியாது”

“நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் மட்டுமே இந்த போட்டியில் பந்தை அடிக்காமலேயே ஆட்டமிழந்தார். அதனால் அவர் அதை அடித்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதாவது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட முயற்சித்த பந்தை லீவ் செய்ய நினைத்து போல்டானார். 2வது இன்னிங்ஸிலும் அவர் சற்று பவுன்ஸ் ஆகி வந்த பந்தை அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். எனவே தோல்விக்கான காரணத்தை சொல்லாதீர்கள். உண்மையாக இருந்து உண்மையாக செயல்படுங்கள். குறிப்பாக தற்போதுள்ள வீரர்கள் தவறை செய்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் அதற்காக தண்டிக்க நினைத்தால் அதை செய்யுங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : ஃபைனலை மிஞ்சி சுப்மன் கில்லுக்கு ஐசிசி மெகா தண்டனை, ஆஸி – இந்தியாவுக்கு தண்டனை அறிவிப்பு, காரணம் என்ன?

முன்னதாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் இதே போல் நட்சத்திர சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் அந்த சீனியர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்க முடிவெடுத்துள்ளதைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மாற்றத்தை நிகழ்த்த வேண்டிய நேரம் வந்துள்ளதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement