WTC Final : ஃபைனலை மிஞ்சி சுப்மன் கில்லுக்கு ஐசிசி மெகா தண்டனை, ஆஸி – இந்தியாவுக்கு தண்டனை அறிவிப்பு, காரணம் என்ன?

- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மோசமாக செயல்பட்ட இந்தியா மெகா தோல்வியை சந்தித்து மீண்டும் வெறுங்கையுடன் வெளியேறியது. குறிப்பாக கடந்த ஃபைனல் உட்பட 2013க்குப்பின் ஐசிசி தொடரில் தொடர்ந்து 10வது வருடமாக இந்தியா சொதப்பலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தோற்றது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இத்தனைக்கும் தரமான வீரர்கள் இருந்தும் அஸ்வினை தேர்வு செய்யாதது டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் முதலில் பேட்டிங் செய்யாமல் ரன்களை வாரி வழங்கியது பேட்டிங்கில் பதிலடி கொடுப்பதற்கு பதிலாக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா போன்ற நட்சத்திரங்கள் யாருமே 50 ரன்கள் கூட எடுக்காமல் சொதப்பியது போன்றவை இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் நீங்கள் அனைவரும் சாதாரண இருதரப்பு தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை தோற்கடித்து சாதனைகளை படைப்பதற்கு மட்டுமே சரியானவர்கள் என இந்திய அணியினரை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

ஐசிசி தண்டனை:
அப்படி ஒரு தலைப்பட்சமாக நடைபெற்ற அப்போட்டியில் 444 என்ற சரித்திரத்தில் எட்டப்படாத இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சுப்மன் கில் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப் பகுதியில் நின்று ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் பந்தை காற்றில் பிடித்தாலும் அதை முழுமை செய்யும் போது தரையில் மோதினார். அதை 3வது நடுவர் சோதித்த போது பந்துகளுக்கு கீழே கைவிரல்கள் இருந்ததால் அவுட் என்று கண்மூடித்தனமான தீர்ப்பு வழங்கியது ரோகித் சர்மா மட்டுமன்றி நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.
ஏனெனில் அந்த தருணத்தில் 2 கைவிரல்களுக்கு நடுவே பந்து தரையைத் தொட்டது தெளிவாக தெரிந்தது. அப்படிப்பட்ட நிலையில் மாபெரும் ஃபைனலில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் போன்ற இளம் வீரர் அவுட் என்று உறுதியாகத் தெரியாத போது சந்தேகத்தின் பலனை அவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சொல்லப்போனால் போட்டி முடிந்ததும் “இது எப்படி அவுட்டாகும்” என்ற வகையில் புகைப்படத்துடன் கில் தனது ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தி நடுவர்களை மறைமுகமாக விமர்சித்தார்.

இந்நிலையில் 2.7 அடிப்படை விதிமுறைப்படி போட்டியில் நடுவர் கொடுத்த தீர்ப்பை பற்றி பொதுவெளியில் விமர்சித்ததற்காக சுப்மன் கில்லுக்கு இந்த போட்டியின் சம்பளத்திலிருந்து 15% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாக களத்தில் பேட்டி கொடுக்கும் போது இதற்கு முன் நிறைய வீரர்கள் நடுவர்களை விமர்சித்து விதிமுறையை மீறி அபராதங்களை செலுத்தியுள்ளனர். ஆனால் நவீன காலத்தில் ட்விட்டரில் விமர்சித்ததையும் கண்டித்துள்ள ஐசிசி 15% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்துள்ளது.

- Advertisement -

அது போக இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்க தவறிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் அனைவருக்கும் இப்போட்டியின் 100% சம்பளமும் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. அந்த வகையில் இப்போட்டியில் தம்முடைய சம்பளம் முழுவதையும் அபராதமாக செலுத்தும் சுப்மன் கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட 15% அபராதத்தை தன்னுடைய பாக்கெட்டில் இருக்கும் சொந்த பணத்திலிருந்து செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:கபில் தேவ், தோனி மட்டுமே சூப்பர் ஸ்டாரா? அந்த கலாச்சாரமே ஐசிசி தொடரில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் – கம்பீர் அதிரடி பேட்டி

அதன் காரணமாக இந்த போட்டியில் தோல்வியாளருக்கு பெற்ற பரிசை தவிர்த்து விளையாடியதற்காக எந்த சம்பளமும் இந்திய அணியினருக்கு கிடைக்காது. அதிலும் குறிப்பாக கில் தம்முடைய வங்கி கணக்கிலிருந்து 15% அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அது போக இதே போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியினருக்கும் இந்தியாவை விட சற்று குறைவான குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால் 80% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அதிரடியாக அறிவித்துள்ளது.

Advertisement