கபில் தேவ், தோனி மட்டுமே சூப்பர் ஸ்டாரா? அந்த கலாச்சாரமே ஐசிசி தொடரில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் – கம்பீர் அதிரடி பேட்டி

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 203 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அஸ்வின் போன்ற சரியான வீரர்களை தேர்வு செய்யாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா வழக்கம் போல படுமாசமான தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறியது. அதனால் 2013க்குப்பின் ஐசிசி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் சுக்குநூறாக உடைந்தது.

- Advertisement -

குறிப்பாக விராட் கோலியால் தான் உலகக் கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை ஆனால் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா அந்தக் குறையை போக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதன் காரணமாக நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் 3 கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து பாராட்டுகளை ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஏனெனில் 2007ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்த அவர் ஃபைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து டி20 உலக கோப்பையை வென்று காட்டினார்.

கம்பீர் குற்றசாட்டு:
அத்துடன் 2011ஆம் ஆண்டு கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்ற அவர் 2013ஆம் ஆண்டு இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன் டிராபியில் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித், அஸ்வின், ஜடேஜா, தவான் போன்ற இளம் வீரர்களை வைத்து கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அந்த வகையில் 2014 டி20 உலக கோப்பை தவிர்த்து 4 ஃபைனல்களில் 4 கோப்பையை தோனி வென்றுள்ள நிலையில் வரலாற்றில் இதர இந்திய கேப்டன்கள் தலைமையில் 7 ஃபைனல்களில் 1983ஆம் ஆண்டு 1 கோப்பையை மட்டுமே கபில் தேவ் தலைமையில் இந்தியா வென்றுள்ளது.

Mohinder Amarnath Kapil Dev 1983 World Cup

இந்நிலையில் திறமை இருந்தும் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து இந்தியா தோற்பதற்கு சூப்பர் ஸ்டார் கலாச்சாரமே காரணம் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். குறிப்பாக 1983 உலகக் கோப்பை செமி ஃபைனல் மற்றும் ஃபைனல்களில் மோகிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருது வென்றும் அவரை யாருக்குமே தெரியாது என்று தெரிவிக்கும் கம்பீர் அனைவருக்கும் கபில் தேவ் கோப்பையை தூக்கும் புகைப்படம் மட்டுமே தெரியும் என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதே போல 2011 உலகக் கோப்பையில் தாம், யுவராஜ் போன்ற அனைவரும் வெற்றியில் பங்காற்றினாலும் தோனியின் புகைப்படம் மட்டும் வருவதாக மறைமுகமாக சாடிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாம் தனிப்பட்ட வீரர்களை அணியை விட பெரிதாக நினைக்கிறோம். இருப்பினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் வீரர்களை விட அணியே பெரிதாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் முதலீடு செய்த ஒளிபரப்பாளர்கள் முதல் ஊடகங்கள் வரை அனைவரும் மக்கள் தொடர்பு ஏஜென்சியை பின்பற்றுகின்றனர்”

Gambhir

“அதனால் ஒளிபரப்பாளர்கள் உங்களுக்கு பாராட்டக் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் மறைந்து போகிறீர்கள் என்பதே உண்மையாகும். அதனால் தான் நாம் ஐசிசி தொடர்களில் சமீப காலங்களில் வெல்லாமல் இருக்கிறோம். ஏனெனில் இங்கே அனைவரும் தனிப்பட்டவர்களை மட்டுமே பாராட்டுகின்றனர். இங்கே எத்தனை பேர் மோகிந்தர் அமர்நாத்தை பற்றி பேசுகிறார்கள்? குறிப்பாக 1983 உலகக் கோப்பையுடன் மோகிந்தர் அமர்நாத் இருக்கும் புகைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதை கேட்டு பாருங்கள்”

இதையும் படிங்க:பழைய பகை காரணமா? விராட் கோலியுடன் சண்டை போட்டது ஏன் – கெளதம் கம்பீர் அதிரடியான பதில்

“ஏனெனில் அவர் தான் அந்த உலகக் கோப்பையின் செமி ஃபைனல் மற்றும் ஃபைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்றவர். ஆனால் நீங்கள் அனைவரும் கபில் தேவ் கோப்பையை தூக்கும் புகைப்படத்தை மட்டுமே பார்த்திருப்பீர்கள். அமர்நாத் பற்றி யாருக்கும் பெரிதாக தெரியாது. எனவே 1983 உலக கோப்பையை காட்டும் போது கபில் தேவ் மட்டுமல்லாமல் அவரையும் காட்டுங்கள்” என்று கூறினார்.

Advertisement