இப்படியும் மனிதர்கள் இருக்காங்களா.. உண்மையான இந்தியாவை பார்த்து வியந்து போன ஜஸ்டின் லாங்கர்.. நெகிழ்ச்சி

Justin Langer
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த வருடம் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத் வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்றது. முன்னதாக இந்த தொடரில் லக்னோ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நட்சத்திர முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டார்.

அதே அணியில் மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் சந்திரசேகர் என்பவர் மசாஜ் தெரபிஸ்ட் துணைப் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட நட்பால் தங்களுடைய வீட்டுக்கு ஒருமுறை வருமாறு ஜஸ்டின் லாங்கருக்கு அவர் அன்பான அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட லாங்கர் ஐபிஎல் தொடர் முடிந்ததும் அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார்.

- Advertisement -

லாங்கர் நெகிழ்ச்சி:
இத்தனைக்கும் ராஜேஷ் சந்திரசேகர் அவர்களின் வீடு மும்பையின் தாராவியில் ஏழைகள் இருக்கும் பின் தங்கிய பகுதியில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத லாங்கர் அன்புடன் அழைத்த சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சந்திரசேகர் குடும்பம் வழங்கிய அன்பான உணவு விருந்தையும் ஏற்றுக்கொண்ட ஜஸ்டின் லாங்கர் தற்போது அது பற்றி தனது நெகிழ்ச்சியான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது பற்றி தி நைட்லி இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “மும்பையின் பின்தங்கிய பகுதிகளில் தாங்கள் வாழ்வதாக ராஜேஷ் என்னிடம் கூறினார். உள்ளூர் கால்பந்து அணிக்கு மசாஜ் பயிற்சி கொடுப்பவராக பணியாற்றியதால் ஐபிஎல் தொடரில் அதிர்ஷ்டமாக வாய்ப்பு கிடைத்ததாக ராஜேஷ் என்னிடம் கூறினார். அதைத்தொடர்ந்து காலை உணவின் போது ராஜேஷ் எங்களுடைய உரையாடல்களை மொழி பெயர்த்தார்”

- Advertisement -

“அதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் சிரித்து எங்களை வரவேற்றனர். அவர்கள் வீட்டில் எங்களை அவர்களின் வைத்திருப்பதில் பெருமையடைந்தனர். அவர்கள் 6 பேரும் நேர்த்தியான உடை அணிந்திருந்தனர். புகைப்படம் எடுக்கும் நேரம் வந்தவுடன் ராஜேஷின் பெற்றோர்கள் எங்களை சுற்றி கைகளை வைத்து சொந்த குடும்பத்துடன் நாங்கள் இருப்பது போன்ற அன்பை உணர வைத்தனர்”

இதையும் படிங்க: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி – உண்மை என்ன?

“அதீத ஆடம்பரமாக நான் வாழ்ந்த பின் மற்ற மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை பார்த்து தாழ்த்தப்படுகிறேன். ராஜேஷ் வீட்டுக்கு சென்றதில் எனக்கு பிடித்தது என்னவென்றால் அவர்களிடம் எதுவுமே இல்லை என்று தோன்றினாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுள்ளனர்” என்று கூறினர். அதாவது ஆடம்பரமாக இல்லாமலேயே ராஜேஷ் போன்ற இந்திய மக்கள் வாழ்க்கையை மிகவும் சாதாரணமாக மகிழ்ச்சியுடன் வாழ்வதை பார்த்து வியப்படைவதாக ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement