பழைய பகை காரணமா? விராட் கோலியுடன் சண்டை போட்டது ஏன் – கெளதம் கம்பீர் அதிரடியான பதில்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 1ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதை விட போட்டியின் முடிவில் பயிற்சியாளராக இருந்து சண்டையை விலக்காத முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் என்னுடைய அணி வீரரை சீண்டுவது எனது குடும்பத்தை திட்டுவதற்கு சமம் என்ற கருத்துடன் விராட் கோலியிடம் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

- Advertisement -

குறிப்பாக 2013ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து விராட் கோலியிடம் சண்டையில் ஈடுபட்ட அவர் 10 வருடங்கள் கழித்து கொஞ்சமும் மாறாமல் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு லக்னோ அணியின் பயிற்சியாளராக வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் தலைநகரான டெல்லி மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்காக 2011 உலகக் கோப்பை உட்பட நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடிய அவர்கள் சீனியர் – ஜூனியர் என்ற மதிப்பை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு இப்படி சண்டையில் ஈடுபட்டது பலரையும் அதிருப்தியடைய வைத்தது.

காரணம் என்ன:
அத்துடன் பெங்களூரு மைதானத்தில் அந்த அணி ரசிகர்களை வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு மிரட்டிய அவர் அந்த சண்டைக்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விராட் கோலியை மறைமுகமாக சீண்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்த உலகக் கோப்பை நாயகனாக கருதப்படும் அவர் ஓய்வுக்கு பின் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டாலும் விராட் கோலியை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

Gautam-Gambhir-and-Virat-Kohli

அதே போல தமது கேரியரின் கடைசி காலகட்டங்களில் வாய்ப்பு கொடுக்காத முன்னாள் கேப்டன் தோனி மீதும் அவ்வப்போது வன்மத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ள அவரை ரசிகர்கள் சர்ச்சைக்குரியவராகவே பார்க்கின்றனர். இந்நிலையில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரிடமும் தாம் ஒரே மாதிரியாக பழகி நட்பான உறவை வைத்துள்ளதாக தெரிவிக்கும் கம்பீர் இது போன்ற சண்டைகள் எல்லாம் களத்தில் ஏற்படும் பரபரப்பான தருணங்களில் வெற்றி பெறுவதற்காக நிகழ்வது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பணத்துக்காக விராட் கோலியுடன் எதற்காக சண்டை போட்டீர்கள் என்று ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு தம்மால் பதில் சொல்ல முடியாது என்று தமக்கே உரித்தான ஸ்டைலில் கூறிய அவர் இது பற்றி சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐபிஎல் 2023 தொடரில் வாக்குவாதம் செய்ததற்கான காரணத்தை விவரித்து பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரிடமும் என்னுடைய உறவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை எங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டால் அது களத்தில் மட்டும் தான் இருக்கும் களத்திற்கு வெளியே இருக்காது. குறிப்பாக சொந்த வாழ்க்கையில் எந்த சண்டையும் கிடையாது”

Gambhir

“அவர்களும் என்னைப்போலவே அவர்களுடைய அணிக்காக வெற்றி பெற முயற்சிப்பார்கள். மேலும் களத்தில் நான் நிறைய சண்டைகளை போட்டுள்ளேன். அதற்காக நான் சண்டைகள் மட்டுமே போடுவேன் என்று அர்த்தமில்லை. இருப்பினும் அந்த சண்டைகள் அனைத்தும் களத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும் சண்டை போட்ட இருவர்களுக்கிடையே நிகழ்ந்த காரணம் மற்றும் உரையாடல்கள் களத்தில் மட்டுமே இருக்க விரும்பும் நான் வெளியில் விட விரும்பவில்லை”

இதையும் படிங்க:WTC Final : இதுக்கு ஐ.பி.எல் எவ்ளோ பெஸ்ட். தோல்விக்கு பிறகு ஐ.சி.சி-யின் ஏற்பாடுகளை விமர்சித்த – ரோஹித் சர்மா

“அது பற்றி நிறைய பேர் நிறையவற்றை சொன்னார்கள். மேலும் ஊடகங்களில் பேட்டி எடுக்கும் போது அதற்கான காரணத்தை டிஆர்பி’யை அதிகரிப்பதற்காக என்னிடம் கேட்டனர். இருப்பினும் வாக்குவாதத்தில் எங்கள் இருவருக்கிடையே நடந்தவற்றை நான் இங்க தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அந்த தருணத்தில் நவீன் எந்த தவறும் செய்யாததால் அவருடன் நிற்க வேண்டிய கடமை எனக்கு ஏற்பட்டது” என்று கூறினார்.

Advertisement