WTC Final : இதுக்கு ஐ.பி.எல் எவ்ளோ பெஸ்ட். தோல்விக்கு பிறகு ஐ.சி.சி-யின் ஏற்பாடுகளை விமர்சித்த – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் ஆட்டமிழந்த விதம் கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிக அளவு விவாதிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் அடித்த பந்தை மூன்றாவது ஸ்லிப் நின்றிருந்த கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்தார். ஆனால் அவர் அப்படி கேட்ச் பிடிக்கும் போது பந்து தரையில் பட்டது போல் தெரிந்தது.

Shubman Gill

- Advertisement -

இதன் காரணமாக மைதானத்தில் இருந்த நடுவர்கள் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினர். ஆனால் மூன்றாவது அம்பயர் அந்த கேட்சை ஒரு சில கோணங்களில் பார்த்துவிட்டு சுப்மன் கில் ஆட்டம் இழந்து விட்டார் என்று தனது இறுதியான முடிவை அறிவித்தார். அதன் பின்னர் கேமரூன் கிரீன் பிடித்த சில புகைப்படங்களை வெளியிட்டு இது அவுட் இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைதள மூலமாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

அதேபோன்று முன்னாள் வீரர்கள் பலரும் இந்த கேட்ச் அவுட் கிடையாது என்று கூறி வந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் : ஐபிஎல் தொடரில் கூட பத்துக்கும் மேற்பட்ட கேமரா கோணங்கள் உள்ளன. ஆனால் ஐசிசி நடத்தும் இதுபோன்ற பெரிய போட்டிகளில் அந்த வசதி இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ஐசிசி-யை மறைமுகமாக சாடியுள்ளார்.

Cameron Green

இது குறித்து அவர் கூறுகையில் : மூன்றாவது அம்பயர் பல கோணங்களில் சரி பார்க்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அதிக முறை ரீப்ளே செய்து கேட்ச் எவ்வாறு பிடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்திருக்க வேண்டும். ஆனால் மூன்றாவது அம்பயரோ மூன்று அல்லது நான்கு முறை பார்த்துவிட்டு அவுட் என்று தெரிவித்துவிட்டார். மூன்றாவது அம்பயருக்கு விக்கெட் வழங்கும் அனைத்து உரிமையும் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் அதை அவர் சரியான மற்றும் தெளிவான முறையில் கொடுத்திருக்க வேண்டும். உறுதியான ஆதாரம் இல்லாமல் அவர் இப்படி விக்கெட் வழங்கியது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. முக்கியமான போட்டி என்பதனால் 100% உறுதியானால் மட்டுமே விக்கெட் வழங்கியிருக்க வேண்டும். அதேபோன்று இந்த மைதானத்தில் ஒன்று அல்லது இரண்டு கேமரா கோணங்கள் மட்டுமே காட்டப்பட்டன.

இதையும் படிங்க : 2011 உ.கோ வெற்றியின் மொத்த பராட்டையும் பணத்துக்காக அவங்க தான் தோனிக்கு கொடுத்துட்டாங்க – கம்பீர் பரபரப்பு குற்றசாட்டு

ஐபிஎல் தொடரில் 10 கேமரா கோணங்கள் காண்பிக்கப்படுகிறது அதன்பிறகே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு பெரிய தொடரில் அல்ட்ரா மோஷன் மற்றும் ஜூம் என எந்த ஒரு வசதியும் இல்லாததில் ஏமாற்றம் அடைவதாக ஐசிசி ஏற்பாடுகள் குறித்து ரோகித் சர்மா மறைமுகமாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement