உங்களோட அந்த பேராசையால் இந்தியாவின் உ.கோ கனவு உடைஞ்சு போச்சு.. சுனில் கவாஸ்கர் அதிருப்தி

- Advertisement -

கோலகலமாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு சோகமானதாக அமைந்தது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் தொடர்ந்து 9 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா செமி ஃபைனலில் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்தையே வரலாற்றில் முதல் முறையாக அசால்டாக வீழ்த்தி ஃபைனலுக்கு சென்றது.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. முன்னதாக மாபெரும் ஃபைனலில் வழக்கம் போல தன்னுடைய சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்திருந்த போது சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:
ஏனெனில் அதன் பின் ஸ்ரேயாஸ், கில் ஏமாற்றியதால் ஏற்பட்ட அழுத்தத்தில் ராகுல் – விராட் கோலி போராடியும் கடைசி 40 ஓவர்களில் வெறும் 4 பவுண்டரி மட்டுமே அடித்த இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் ரோகித் சர்மா சற்று அவசரப்படாமல் விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்பதே பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் மேக்ஸ்வெல் ஓவரில் ஏற்கனவே பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்த ரோகித் சர்மா சற்று பேராசைப்படாமல் பொறுமையை காட்டியிருந்தால் எக்ஸ்ட்ராவாக 30 ரன்களை அடித்து இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று சுனில் கவாஸ்கர் ஆதங்கத்துடன் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா கொடுத்த கேட்ச்சை டிராவிஸ் ஹெட் அபாரமாக பிடித்தது இந்தியா 300 ரன்கள் அடிப்பதற்கான தன்னம்பிக்கையை தகர்த்தது”

- Advertisement -

“அப்போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் அதிரடியாக விளையாடி 40+ ரன்கள் எடுத்தார். அவருடைய விக்கெட் பவர் பிளேவின் கடைசி ஓவரில் உள்வட்டத்திற்கு வெளியே 2 ஃபீல்டர்கள் மட்டும் இருந்த போது விழுந்தது. இத்தனைக்கும் அவர் அதே ஓவரில் ஏற்கனவே சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்தார். இருப்பினும் பவர்பிளே முடிவதற்குள் இன்னும் சில ரன்கள் அடிப்போம் என்று அவர் நினைத்தார். அந்த இடத்தில் அவர் பேராசையுடன் இருந்தாரா? கில் ஏற்கனவே அவுட்டான நிலையில் அவரால் தம்மை கட்டுப்படுத்திக் கொண்டு விளையாட முடியாதா”

இதையும் படிங்க: கவலையே படாம இதை மட்டும் பண்ணுங்க போதும்.. ஆஸி டி20 தொடருக்கு முன்னர் – கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி

“ஆஸ்திரேலியாவுக்கு 5வது பவுலர் லாட்டரி போல் செயல்பட்டது. ரோகித் சர்மாவின் விக்கெட் முக்கியமானது மட்டுமல்ல. அது மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் பகுதிநேர ஆஸ்திரேலிய பவுலர்களை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியது. அந்த வகையில் 30 ரன்களை இந்தியா எடுக்க தவறியது. அது வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது விவாதத்திற்கு உரியதாகும்” என்று கூறினார்.

Advertisement