கவலையே படாம இதை மட்டும் பண்ணுங்க போதும்.. ஆஸி டி20 தொடருக்கு முன்னர் – கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அடுத்ததாக இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி நவம்பர் 23-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது இந்திய அணி இந்த தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்த சூரியகுமார் யாதவ் கூறுகையில் : தற்போது டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணியை பலப்படுத்த வேண்டியது அவசியம்.

என்னுடைய அட்வைஸ் எல்லாம் வீரர்களுக்கு தெளிவான ஒன்றாக தான் இருக்கும். அதாவது இந்த தொடரில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுகிறார்களோ அதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

- Advertisement -

தற்போதைக்கு இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி மிகச் சிறப்பான ஃபார்மில் அணிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களது ஆட்டம் குறித்து சப்போர்ட் ஸ்டாப்களும் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் அதே ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்த தொடரானது ஒரு நல்ல தொடர் என்கிற உணர்வை தர வேண்டும் என்றும் சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : புதிய கேப்டன் வேணாம்.. 2024 டி20 உ.கோ தொடருக்கு அவர் தான் இருக்கனும் – கௌதம் கம்பீர் கோரிக்கை

ரோகித் சர்மா, கே.எல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, பும்ரா போன்றோர் இந்த தொடரில் இடம் பெறாத வேளையில் முதல் முறையாக சூரியகுமார் யாதவ் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement