புதிய கேப்டன் வேணாம்.. 2024 டி20 உ.கோ தொடருக்கு அவர் தான் இருக்கனும் – கௌதம் கம்பீர் கோரிக்கை

Gautam Gambhir 6
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை நழுவ விட்டது. குறிப்பாக லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து செமி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா முக்கியமான ஃபைனலில் பேட்டியில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அதனால் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். இதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாண்டிய காயமடைந்துள்ளதால் சூரியகுமார் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

கம்பீர் கோரிக்கை:
முன்னதாக கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதனால் அவரை கழற்றி விட்டு பாண்டியா தலைமையில் புதிய இளம் அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்குவதற்கான வேலையை கடந்த வருடமே பிசிசிஐ மறைமுகமாக துவங்கியது. மேலும் ரோகித் சர்மா, அஸ்வின், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர்களுடன் விராட் கோலியையும் டி20 கிரிக்கெட்டில் கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தான் மற்றவர்களை காட்டிலும் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடினார்கள். இந்நிலையில் பாண்டியா இருந்தாலும் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்தியாவின் வெற்றிக்கு விராட் கோலி அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவருமே தேர்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாக ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆம் ஹர்திக் பாண்டியா சமீபத்திய டி20 தொடர்களில் இந்தியாவை வழி நடத்தினார். ஆனால் இப்போதும் நான் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்துவதை பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: நாங்க வெறும் பேப்பர் டீம் இல்ல.. 2027லயும் இந்தியாவை செய்வோம்.. முகமது கைஃப்’க்கு வார்னர் பதிலடி

“ஏனெனில் இந்த உலகக் கோப்பையில் அவர் தம்மால் பேட்டிங்கில் எந்தளவுக்கு அதிரடியாக விளையாட முடியும் என்பதை காட்டினார். எனவே ரோஹித் தேர்வு செய்யப்பட்டால் தாமாகவே விராட் கோலியும் தேர்வு செய்யப்படுவார். மேலும் ரோகித் டி20 உலக கோப்பையில் விளையாட விரும்பினால் பேட்ஸ்மேனாக அல்லாமல் கேப்டனாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement