நாங்க வெறும் பேப்பர் டீம் இல்ல.. 2027லயும் இந்தியாவை செய்வோம்.. முகமது கைஃப்’க்கு வார்னர் பதிலடி

David Warner 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே இந்தியாவிடம் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடியது. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த ஆஸ்திரேலியா மாபெரும் இறுதி போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை வென்றது.

மறுபுறம் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி லீக் சுற்றில் 9 வெற்றிகளை பற்றி செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பேட்டிங் துறையில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்த இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது.

- Advertisement -

வார்னரின் பதிலடி:
அதனால் ஏராளமான இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இன்னும் தோல்வியை நம்ப முடியாமல் சோகத்துடன் காணப்படுகின்றனர். அந்த நிலைமையில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதற்கு வாழ்த்துக்கள் ஆனால் சிறந்த அணி (ஆஸ்திரேலியா) ஃபைனலில் கோப்பையை வென்றது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியிருந்தார்.

குறிப்பாக தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இந்திய அணி தான் பேப்பரில் மிகவும் வலுவான அணியாக இருப்பதாக தெரிவித்த அவர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் வெளிப்படுத்திய செயல்பாடுகளுக்கு தலைவணங்குவதாக கலங்கிய கண்களுடன் பேசியிருந்தது வைரலானது. இந்த நிலையில் அவருடைய கருத்துக்களை பார்த்த டேவிட் வார்னர் ட்விட்டரில் கொடுத்த பதிலடி பின்வருமாறு.

- Advertisement -

“முகமது கைஃபை நான் விரும்புகிறேன். இருப்பினும் பேப்பரில் என்ன இருக்கிறது என்பது பிரச்சனையில்லை. நாளின் முடிவில் நீங்கள் களத்தில் அவசியமான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படுவதே முக்கியமாகும். அது தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அது எந்த வழியில் வேண்டுமானாலும் செல்லலாம். அதுவே விளையாட்டாகும். அடுத்ததாக 2027 நோக்கி நாங்கள் வருகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நாங்க வெறும் பேப்பர் டீம் இல்ல.. 2027லயும் இந்தியாவை செய்வோம்.. முகமது கைஃப்’க்கு வார்னர் பதிலடி

அதாவது பேப்பரில் வலுவான அணியாக இருந்தால் போதாது ஃபைனலில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கே கோப்பை என்று டேவிட் வார்னர் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன் இப்போது மட்டுமல்ல 2027 உலகக் கோப்பையில் இந்தியாவை ஃபைனலில் சந்தித்தால் அப்போதும் தோற்கடித்து வெற்றி வாகை சூடுவதற்கு நாங்கள் வருவோம் என்றும் டேவிட் வார்னர் இப்போதே கெத்தாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement