ஹார்டிக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு – ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு

Hardik-Pandya
- Advertisement -

எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளுமே தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், டிரேடிங் முறையில் மாற்றம் செய்து கொள்ளும் வீரர்களையும் முறைப்படுத்தும் படி ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. அந்த வகையில் ஒரு சில வீரர்கள் அணிகளுக்கு இடையே டிரேடிங் முறையில் மாற்றம் அடைந்துள்ளனர். அதோடு ஏலத்திற்கு முன்பாக கழட்டி விடப்பட இருக்கும் வீரர்களின் பட்டியலையும் தற்போது அனைத்து அணிகளும் தயார் செய்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது வெளியான ஒரு தகவலின் படி ஹார்டிக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டால் அவருக்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக டிரேடிங் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் பாண்டியா எப்படி இதற்கு ஒப்புக் கொள்வார் என்ற கேள்வி இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் சார்பில் பாண்டியாவை மீண்டும் ஆர்ச்சருக்கு பதிலாக மும்பை அணிக்கு அழைத்தால் நிச்சயம் அவர் வர வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் அணியில் ஓராண்டு காத்திருந்தால் ரோகித் சர்மாவிற்கு பதிலாக அவருக்கு கேப்டன் பதவியும் வழங்கப்படலாம் என்ற ஒரு நிபந்தனை இருந்தால் நிச்சயம் அதனை பாண்டியா ஏற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் அந்த தொடர் முழுவதுமே காயம் காரணமாக விளையாடவில்லை. அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பின்னர் மீண்டும் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதோடு 2023-ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் காயம் காரணமாக ஆர்ச்சர் இடம் பெறவில்லை. இப்படி காயத்தால் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வரும் அவரை டிரேடிங் முறையில் குஜராத் அணியிடம் விட்டுக் கொடுத்துவிட்டு அவருக்கு பதிலாக பாண்டியாவை சில நிபந்தனைகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வெளியான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல்.. டாப் 4ல் 3 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

கடந்த 2015-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் கரியரை துவங்கிய ஹார்டிக் பாண்டியா 2021-ஆம் ஆண்டு வரை அந்த அணியில் முன்னணி வீரராக விளையாடி வந்தார். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டு குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவரது தலைமையில் அறிமுக தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதோடு நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் கூட இறுதிப்போட்டி வரை வந்து சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement