வெளியான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல்.. டாப் 4ல் 3 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Kohli-and-Rohit
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் முடிவில் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் புதிய தரவரிசை பட்டியலை இன்று ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதல் நான்கு இடத்தில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான சுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாமும் இடம் பிடித்துள்ளனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதேவேளையில் பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை பொருத்தவரை தென்ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகாராஜ் 741 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் நான்கு இந்திய வீரர்கள் முதல் 10 இடங்களில் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மூன்றாவது இடத்திலும், பும்ரா நான்காவது இடத்தினையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : உலகக்கோப்பையை வென்று என்ன புண்ணியம்? ஆஸ்திரேலியாவில் அவலத்தை சந்தித்த கம்மின்ஸ் – விவரம் இதோ

அதனைத்தொடர்ந்து குல்தீப் யாதவ் ஆறாவது இடத்திலும், முகமது ஷமி பத்தாவது இடத்திலும் உள்ளனர். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசை பட்டியலும் வெளியாகியுள்ளது. மேலும் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது அனைத்து வடிவ வடிவத்திலும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement