உலகக்கோப்பையை வென்று என்ன புண்ணியம்? ஆஸ்திரேலியாவில் அவலத்தை சந்தித்த கம்மின்ஸ் – விவரம் இதோ

Cummins
- Advertisement -

இந்தியாவில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற ஐசிசி-யின் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது ஆறாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரினை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அதேவேளையில் சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வெற்றி அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடிய 10 போட்டிகளிலும் கெத்தாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வேளையில் கடைசி போட்டியில் அடைந்த தோல்வி பெருமளவு விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

பலம் வாய்ந்த இந்திய அணியை 2003-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருந்தது.

கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் ஆறு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் நீடிக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்காக ஆலன் பார்டர், ஸ்ரீ வாக், ரிக்கி பாண்டிங் (2முறை), மைக்கல் கிளார்க் ஆகியோர் ஒருநாள் கோப்பையை கேப்டனாக வென்றிருந்தனர்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது பேட் கம்மின்ஸ்சும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை வென்று டிராஃபியுடன் நாடு திரும்பிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ்சை வரவேற்க ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் யாரும் வரவில்லை என்கிற தகவல்களும் அது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளன.

இதையும் படிங்க : எனக்கு மிகவும் பிடிச்ச பேட்டிங் பார்ட்னர் அவர் தான்.. ரசிகர்கள் எதிர்பாரா பெயரை சொன்ன கம்பீர்

ஒருவேளை இந்திய அணி இந்த கோப்பையை கைப்பற்றி இருந்தால் நாடு முழுவதுமே கொண்டாட்டமாக இருந்திருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் கோப்பையை வென்று நாடு திரும்பிய கேப்டனை வரவேற்க கூட ரசிகர்கள் வராதது பெரிய அளவில் ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும் மீடியாவை சேர்ந்த நபர்கள் மட்டுமே புகைப்படம் மற்றும் வீடியோவை எடுக்க நேரில் வந்துள்ளனர் என்றும் அதை தவிர்த்து பெரிய அளவில் அவரை அங்கு வரவேற்க யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement