எனக்கு மிகவும் பிடிச்ச பேட்டிங் பார்ட்னர் அவர் தான்.. ரசிகர்கள் எதிர்பாரா பெயரை சொன்ன கம்பீர்

Gautam Gambhir 5
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவுக்காக விளையாடிய மிகச்சிறந்த இடது கை ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் எடுத்து முதல் முறையாக தோனி தலைமையில் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் 97 ரன்கள் எடுத்து 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அந்த வகையில் இந்தியாவின் உலகக்கோப்பை நாயகனாக போற்றப்படும் அவர் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி ஐபிஎல் தொடரிலும் 2 கோப்பைகளை கேப்டனாக வென்று ஓய்வு பெற்றார். ஆனால் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் பல நேரங்களில் தோனி, விராட் கோலி ஆகியோர் மீது தாறுமாறான விமர்சனங்களை வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் பார்ட்னர்:
அதிலும் குறிப்பாக 2011 உலகக்கோப்பை ஃபைனலில் 97 ரன்கள் அடித்த தமக்கு பதிலாக 91* ரன்கள் குவித்த காரணத்தால் ஆட்டநாயகன் விருது வென்ற தோனி ஒன்றும் தனி ஒருவனாக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்று 12 வருடங்கள் கடந்தும் அவர் விமர்சிப்பது ஓயவில்லை. இந்நிலையில் களத்தில் நீங்கள் ஜோடி போட்டு விளையாடுவதற்கு உங்களுக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் யார் என்று கம்பீரிடம் சமீபத்திய பேட்டியில் செய்தியாளர் கேட்டார்.

அதற்கு எம்எஸ் தோனி என்று அவர் எதிர்பாராத பதிலை கொடுத்து பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த பார்ட்னர் எம்எஸ் தோனி ஆவார். பொதுவாக அனைவரும் வீரேந்திர சேவாக் தான் எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னராக இருப்பார் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையாக நான் தோனியுடன் சேர்ந்து அதிகமாக விளையாடுவதையே விரும்பினேன்”

- Advertisement -

“குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவருடன் ஜோடியாக விளையாடுவதை விரும்புகிறேன்” என்று கூறினார். இப்படி அவ்வப்போது தோனியை பாராட்டி பேசுவதற்கும் கம்பீர் தவறுவதில்லை என்று சொல்லலாம். குறிப்பாக ஆரம்ப காலங்களில் 3வது இடத்தில் விளையாடிய தோனி நாளடைவில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அணியின் நலனுக்காக லோயர் மிடில் ஆர்டரில் விளையாடினார்.

இதையும் படிங்க: இந்தியா தோத்தது கிரிக்கெட்டுக்கு நல்லது.. ஏன்னா இது தான் காரணம்.. அப்துல் ரசாக் பேட்டி

ஆனால் ஒருவேளை தொடர்ந்து 3வது இடத்திலேயே விளையாடியிருந்தால் கண்டிப்பாக தோனி இன்னும் பெரிய ரன்கள் குவித்து ஏராளமான உலக சாதனைகளை படைத்திருப்பார் என்றும் கம்பீர் ஏற்கனவே பாராட்டியிருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ அணியிலிருந்து விலகி கொல்கத்தா அணியில் ஆலோசராக செயல்பட கம்பீர் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement