இந்தியா தோத்தது கிரிக்கெட்டுக்கு நல்லது.. ஏன்னா இது தான் காரணம்.. அப்துல் ரசாக் பேட்டி

Abdul Razzaq
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை 6வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலில் பேட்டிங் துறையில் மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இருப்பினும் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் 10 தொடர் வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அனைத்து எதிரணிகளையும் லீக் சுற்றில் தோற்கடித்தது. அதே போல விராட் கோலி 765 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த நிலையில் ஷமி 24 விக்கெட்டுகள் எடுத்து மிகச்சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

கிரிக்கெட்டுக்கு நல்லது:
அத்துடன் கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா போன்ற அனைத்து வீரர்களும் தங்களால் முடிந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி போராடி தோல்வியை சந்தித்ததால் இந்திய அணியால் ரசிகர்கள் பெருமை அடைபவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் இதே தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 1992 சாம்பியன் பாகிஸ்தான், 1996 சாம்பியன் இலங்கை போன்ற அணிகள் செமி ஃபைனல் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வீட்டுக்கு கிளம்பின.

குறிப்பாக ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த அவமானத்தை மறந்த பாகிஸ்தான் ரசிகர்கள் தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையின் சோக்கர் என்றால் இந்தியா நாக் அவுட் போட்டிகளின் சோக்கர் என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியா சொந்த மண்ணில் மண்ணை கவ்வி தோல்வியை சந்தித்தது கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்ருமாறு. “கிரிக்கெட் வென்றது இந்தியா தோற்றது. ஒருவேளை இந்தியா உலகக் கோப்பையை வென்றிருந்தால் அது கிரிக்கெட்டுக்கு சோகமான நாளாக அமைந்திருக்கும். ஏனெனில் அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் சூழ்நிலைகளையும் விதிமுறைகளையும் சாதகமாக பயன்படுத்தினார்கள். குறிப்பாக அகமதாபாத் பிட்ச் போல இதற்கு முந்தைய ஐசிசி ஃபைனல்களில் மோசமான பிடிச்சை நான் பார்த்ததில்லை”

இதையும் படிங்க: தாமதமாகும் ஹார்டிக் பாண்டியாவின் கம்பேக்.. அடப்பாவமே இதுவேறயா? – அடிமேல் அடி வாங்கும் இந்திய அணி

“எனவே இந்தியா தோல்வியை சந்தித்தது ஒட்டுமொத்த கிரிக்கெட்டுகும் மகத்தான செய்தியாகும்” என்று கூறினார். முன்னதாக இந்திய பவுலர்கள் ஸ்விங் செய்வதற்காக ஐசிசி புதிய பந்துகளை கொடுப்பதாகவும், டிஆர்எஸ் விதிமுறைகளை ஒளிபரப்பு நிறுவனங்கள் உதவியுடன் இந்தியா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியாகவும், ரோஹித் சர்மா டாஸ் போடுவதில் ஏமாற்றுவதாகவும் ஹசன் ராஜா, ஹபீஸ், சிக்கந்தர் பக்த் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement