தாமதமாகும் ஹார்டிக் பாண்டியாவின் கம்பேக்.. அடப்பாவமே இதுவேறயா? – அடிமேல் அடி வாங்கும் இந்திய அணி

Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் சில லீக் ஆட்டங்களில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியின் போது கணுக்காலில் காயம் அடைந்த அவர் அந்த போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார்.

பின்னர் இந்திய அணியிலிருந்து வெளியேறிய பாண்டியா சிகிச்சை முடிந்து விரைவில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயத்தின் தன்மை தீவிரமடைந்ததால் அவர் எஞ்சிய உலகக்கோப்பை தொடரிலிருந்தே விலகும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

அவரது இந்த விலகல் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திய வேளையில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது. இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையை முடித்த ஹார்டிக் பாண்டியாவிற்கு மேலும் சிகிச்சை தேவைப்படும் என்பதனால் எதிர்வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெறவுள்ள வேளையில் பாண்டியாவே அந்த இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பார் என்று பேசப்பட்டு வந்தது. இவ்வேளையில் அவரது கம்பேக் தாமதமாகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் வெளியான தகவலில் பாண்டியாவின் காயம் குணமடைய அடுத்த மார்ச் மாதம் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளதால் அவர் நேரடியாக 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே விளையாட வாய்ப்புள்ளதாகவும் அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள எந்த ஒரு தொடரிலும் பாண்டியா இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அவங்களால என்னோட நல்ல பெர்ஃபார்மன்ஸ் பாத்து ஜீரணிக்க முடியல.. விமர்சனங்களுக்கு ஷமி பதிலடி

அதேபோன்று அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி துவங்கவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் கேப்டனாக அவரே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் தற்போது உலகக்கோப்பை வரை அவர் சர்வதேச போட்டியில் விளையாட மாட்டார் என்பதனால் அதுவரை இந்திய அணி புதிய டி20 கேப்டனுடன் விளையாட வேண்டிய சிக்கலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement