அவங்களால என்னோட நல்ல பெர்ஃபார்மன்ஸ் பாத்து ஜீரணிக்க முடியல.. விமர்சனங்களுக்கு ஷமி பதிலடி

Mohammed Shami Press
- Advertisement -

ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக நடைபெற்ற முடிந்த ஐசிசி 2023 உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை கோட்டை விட்டது. அதனால் சொந்த மண்ணில் 2011 போல கோப்பை வெல்வதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா கடந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளையும் நிறுத்த முடியாமல் தலை குனிந்தது.

இருப்பினும் இத்தொடரில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உட்பட அனைத்து எதிரணிகளையும் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தையும் வீழ்த்தியது. அந்த வகையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்த இந்திய அணியில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

ஷமியின் பதிலடி:
அதே போல முகமது ஷமி 24 விக்கெட்டுகளை சாய்த்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்தார். ஆனால் அதையெல்லாம் பாராட்டாத ஹசன் ராஜா, முகமது ஹபீஸ் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அதிகமாக ஸ்விங் கிடைப்பதற்காக ஷமி போன்ற பவுலர்களுக்கு ஐசிசியே புதிய பந்தை கொடுப்பதாக விமர்சித்தனர்.

அத்துடன் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை ஒளிபரப்பு நிறுவனத்துடன் தங்களுக்கு சாதகமாக இந்தியா பயன்படுத்துவதாகவும் அவர்கள் விமர்சித்தனர். மேலும் ரோகித் சர்மா டாஸ் போடுவதில் ஏமாற்றுவதாக மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் சிக்கந்தர் பக்த் கண்மூடித்தனமான விமர்சனத்தை வைத்தார். இந்நிலையில் தாம் உட்பட அனைத்து இந்திய வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதை ஹசன் ராஜா போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று ஷமி பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“உலகக் கோப்பையின் துவக்கத்தில் நான் விளையாடவில்லை. ஆனால் திடீரென வாய்ப்பு கிடைத்ததும் நான் 5, 4, 5 விக்கெட்டுகளை எடுத்தேன். அதை சில பாகிஸ்தான் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும். பொதுவாக மற்றவர்களின் வெற்றியில் பாடத்தை கற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியும். ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று நினைக்கின்றனர்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : லக்னோ அணியிலிருந்து வெளியேறிய கம்பீர்.. புதிய அணியில் ஆலோசகராக அறிவிப்பு

“இருப்பினும் தங்கள் அணிக்கு தேவையான நேரங்களில் அசத்துபவர்களே சிறந்தவர்கள். ஆனால் அதை அறியாத அவர்கள் இந்திய பவுலர்கள் வித்தியாசமான கம்பெனியின் பந்து, வித்தியாசமான கலர் பந்தை பயன்படுத்துவதாக விமர்சித்தார்கள். இத்தனைக்கும் வாசிம் அக்ரம் அனைத்தையும் விளக்கினார். அப்படியிருந்தும் அது போன்ற கருத்துக்களை சொல்லும் உங்களை போன்ற முன்னாள் வீரர்களை பார்த்து ரசிகர்கள் சிரிப்பார்களே தவிர ரியாக்சன் கொடுக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement