போனா போகட்டும்ன்னு தோனிக்கு மும்பை போட்டுக் கொடுத்தாங்க.. காரணம் இது தான்.. கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar 5
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் அசத்தி வரும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கான பாதையில் வெற்றி நடை போட்டு வருகிறது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் தோனி ஒப்படைத்துள்ளார்.

அதனால் 8வது இடத்தில் பேட்டிங் செய்யும் அவர் ஆரம்பக்கட்ட போட்டிகளில் களமிறங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த சூழ்நிலையில் டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் கடைசி ஓவரில் 20 ரன்கள் அடித்து மொத்தம் 37* (16) ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதே போல மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி 4 பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பை தோனி பெற்றார்.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:
அந்த வாய்ப்பில் சுமாராக பந்து வீசிய பாண்டியாவுக்கு எதிராக 6, 6, 6, 2 என ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் மொத்தம் 20* (4) ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். குறிப்பாக 2011 உலகக் கோப்பை ஃபைனலில் சிக்ஸர் அடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அதே வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 13 வருடங்கள் கழித்து தோனி அடித்த சிக்ஸர்கள் மும்பை ரசிகர்களையே கொண்டாட வைத்தது.

கடைசியில் தோனி அடித்த அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் பரம எதிரி மும்பையை தோற்கடித்த சென்னை 4வது வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் 42 வயதிலும் தோனி மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போனால் போகட்டும் என்ற வகையில் தோனி சிக்ஸர்களை அடிப்பதற்கு தகுந்த பந்தை ஹர்திக் பாண்டியா வீசியதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “போட்டிக்கு முன்பாக தோனி எப்படி பயிற்சி எடுத்தார் என்பதை மும்பை இந்தியன்ஸ் அணி பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். எனவே மும்பையில் தோனிக்கு கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று கருதி அவர்கள் இதை செய்திருக்கலாம். அதனால் நாமும் அதே வழியில் சென்று அவர் மும்பை ரசிகர்களை மகிழ்விக்கட்டும் முடிவை அவர்கள் எடுத்தனர்”

இதையும் படிங்க: இன்று ஹார்டிக் பாண்டியாவை விமர்சிப்பவர்கள் நாளை நிச்சயம் அவரது புகழை பாடுவார்கள் – கைரன் பொல்லார்டடு நம்பிக்கை

“இருப்பினும் இதை நான் விடப்போவதில்லை. நானும் தோனியின் ரசிகர் தான். அவர் சிக்ஸர் அடிப்பதை பார்க்க விரும்புகிறேன். ஆனால் லென்த் பந்தில் இப்படி 3 சிக்ஸர்கள் அல்ல. எனவே இது தோனிக்கு ஃபெனிபிட் மேட்ச் போல இருந்தது. அங்கே அவர் முதல் பந்தில் அவுட்டாவதை விரும்பவில்லை. மாறாக ஃபெனிபிட் போட்டியில் அவர் வெற்றிகரமாக செயல்படுவதை நீங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறீர்கள்” என்று கூறினார்.

Advertisement