இன்று ஹார்டிக் பாண்டியாவை விமர்சிப்பவர்கள் நாளை நிச்சயம் அவரது புகழை பாடுவார்கள் – கைரன் பொல்லார்டடு நம்பிக்கை

Kieron-Pollard
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செயல்பட ஆரம்பித்ததிலிருந்து அந்த அணியின் மீதான அதிருப்தியை ரசிகர்கள் வெளிகாட்டி வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் மும்பை அணி தோல்வியை சந்திக்கும்போது பாண்டியா மீது பெரும் சர்ச்சையே எழுகிறது. இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியிடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இவ்வேளையில் கேப்டன் பாண்டியா எடுத்த முடிவுகள் தவறானது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் மைதானத்தில் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்களின் எதிர்ப்பு குரலும் எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய சிஎஸ்கே போட்டிக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் கோச்சான கைரன் பொல்லார்டு கூறுகையில் :

இனிவரும் காலத்தில் மும்பை ரசிகர்கள் நிச்சயம் ஹார்டிக் பாண்டியாவின் புகழை பாடுவார்கள். தற்போது ஹார்டிக் பாண்டியா மீது அதிருப்தியை தெரிவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் நிச்சயம் அவரது ஆட்டத்தை பார்த்து பின்னாளில் அவரது புகழை பாடுவார்கள். அவரது ஆட்டம் தற்போது பாதிக்கப்பட்டது போல் தெரிந்தாலும் நிச்சயம் அவரால் மீண்டு வர முடியும்.

- Advertisement -

ஹார்டிக் பாண்டியா டாசின் போது ரொம்பவே சிரிக்கிறார். ஆனால் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் ரசிகர்களின் விமர்சனம் அவரது ஆட்டத்தையும் பாதிக்கிறது. அவர் ஒரு இந்திய வீரர் அவருக்கு இப்படி நடப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கூறுகையில் :

இதையும் படிங்க : பாண்டியா சொன்னதை கவனிச்சீங்களா..தோனி மாதிரி ரோஹித் இல்ல.. மும்பை தப்பு பண்ணிட்டாங்க.. கில்கிறிஸ்ட் விமர்சனம்

ஒரு தனிப்பட்ட வீரரை அனைத்து பிரச்சனைகளுக்கும் கைகாட்டுவது என்பது எரிச்சலாக இருக்கிறது. இறுதியில் இது ஒரு டீம் கேம் தான். அதனால் அவரை விமர்சிக்க வேண்டாம் என்றும் நிச்சயம் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது ரசிகர்கள் அவரது புகழை பாடுவார்கள் என்றும் பொல்லார்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement