பாண்டியா சொன்னதை கவனிச்சீங்களா..தோனி மாதிரி ரோஹித் இல்ல.. மும்பை தப்பு பண்ணிட்டாங்க.. கில்கிறிஸ்ட் விமர்சனம்

Adam Gilchrist 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நான்கு தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் தவித்து வருகிறது. 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை இந்த வருடம் கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததற்கு அந்த அணி ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு தரமான ரோகித் சர்மாவை கழற்றி விட்ட பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை அணி நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறு என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சித்துள்ளார். ஏனெனில் சொந்த ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் எவ்வளவு திறமை இருந்தாலும் உங்களால் வெற்றி பெறுவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனி மாதிரி இல்ல:
அத்துடன் ஸ்டம்ப்புகளுக்கு பின்னே இருந்து தோனி சிஎஸ்கே அணிக்கு உதவி செய்ததால் நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் தாங்கள் தோல்வியை சந்தித்ததாக ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். அந்த வகையில் ருதுராஜ் தலைமையிலான சென்னைக்கு தோனி உதவி செய்வது போல் பாண்டியா தலைமையிலான மும்பை அணிக்கு ரோஹித் சர்மா உதவவில்லை என்றும் கில்கிறிஸ்ட் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றிகரமான அணிகள் தங்களுடைய சொந்த வெற்றிகளால் இறையாகின்றன. மும்பை அணி பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்கினாலும் “நாங்கள் இதில் முதலீடு செய்யவில்லை” என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். அவர்கள் இந்த பெரிய படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக உணர்வதால் கண்முடித்தனமாக உணர்கின்றனர்”

- Advertisement -

“ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக செய்யப்பட்டதில் ரோஹித் சர்மா மகிழ்ச்சியுடன் இருக்கிறாரா இல்லையா, அதை அவர் ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது கேள்வியாகும். எனவே அங்கே தான் இந்த உணர்வு வருகிறது. தோனி பற்றி பாண்டியா சொன்ன அந்த ஒரு வரி மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. மும்பை அணியில் அவர் ஒரு ஒற்றை ஓநாய் போல் உணர்கிறார் என்பதை அது கூறுகிறது”

“தன்னைச் சுற்றி ஆதரவு கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவருக்குள் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக எதிரணியில் அனுபவமில்லாத ருதுராஜ் ஆதரவை பெறுவதாக ஹர்திக் பாண்டியா அவதானிக்கிறார். எனவே இந்த நேரத்தில் மும்பை அணியில் நிலையற்றத் தன்மை மற்றும் தயக்கத்துடன் ஹர்திக் பாண்டியா இருக்கும் ம

Advertisement