இதுல அர்த்தமிருக்கா.. முதல் போட்டியில் நடந்ததை மறக்காதீங்க.. தோனியுடன் ஒப்பிட்ட ஜுரலை நேர்மாறாக விமர்சித்த கவாஸ்கர்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமான துருவ் ஜுரேல் முதல் இன்னிங்ஸிலேயே 46 ரன்கள் அடித்து வெற்றி பங்காற்றினார். அதைத் தொடர்ந்து ராஞ்சியில் நடந்த நான்காவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் அழுத்தத்தின் பிடியில் சிக்கிய இந்தியாவை 90 ரன்கள் அடித்து காப்பாற்றிய அவர் 2வது இன்னிங்சிலும் 39* ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அப்படி அழுத்தமான நேரத்தில் விழிப்புணர்வுடன் விளையாடிய அவர் அடுத்த எம்எஸ் தோனியாக உருவாகும் வழியில் இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியிருந்தார். அந்த நிலையில் தரம்சாலாவில் நடைபெறும் கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 57, ரோஹித் 103, கில் 110, படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:
அதனால் 376/4 என்ற வலுவான நிலையில் களமிறங்கிய துருவ் ஜுரேல் 24 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்றார். ஆனால் சோயப் பஷீர் சுழலில் இறங்கி சென்று சிக்சர் அடிக்க முயற்சித்த அவருடைய பேட்டின் அடி விழும்பில் பட்ட பந்து கேட்ச்சாக மாறியது. அதனால் துருவ் ஜுரேல் தன்னுடைய தவறான ஷாட் மீது ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டே பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில் அந்த சமயத்தில் இந்தியா வலுவான நிலையில் இருந்ததால் துருவ் ஜுரேல் அப்படியொரு ஷாட்டை அடித்து அவுட்டாக வேண்டிய அவசியமில்லை என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை பெற்றும் கடைசியில் இந்தியா தோல்வியை சந்தித்ததை போல் வெற்றியை தொடும் வரை எதையும் உறுதியாக எடுத்துக்கொண்டு அஜாக்கிரதையாக விளையாடாதீர்கள் என்று அவருக்கு கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜுரேல் அந்த ஷாட் மீது மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பார். ஆம் அது நடந்து விட்டது. அது பேட்டின் அடியில் பட்டது. நல்ல நிலையில் புதிதாக பேட்டிங் செய்ய வந்த நீங்கள் 24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டீர்கள். எதிர்புறம் ஜடேஜா பேட்டிங் செய்வதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அந்த நேரத்தில் டீப் திசையில் ஒரு ஃபீல்டர் இருப்பதும் உங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க: இந்தியாவை 500 ரன்களை தொட விடாத இங்கிலாந்து.. ஆண்டர்சன் மாபெரும் உலக சாதனை.. வார்னேவை மிஞ்சிடுவாரு போல

“எனவே அந்த ஷாட்டை அடிப்பதற்கான அவசியமில்லை. அதனால் தன்னுடைய பேட்டை பார்த்துக்கொண்டே ஜுரேல் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எப்போதும் ஹைதராபாத்தில் என்ன நடந்தது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற போட்டிகள் உங்களுக்கு பாடத்தை கற்றுக் கொடுக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் எதையும் உறுதியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று கூறினார். இறுதியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 477 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement