இந்தியாவை 500 ரன்களை தொட விடாத இங்கிலாந்து.. ஆண்டர்சன் மாபெரும் உலக சாதனை.. வார்னேவை மிஞ்சிடுவாரு போல

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி தரம்சாலா நகரில் மார்ச் 7ஆம் தேதி துவங்கியது. அந்த போட்டியில் ஏற்கனவே தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்த இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இருப்பினும் அதற்கு தகுந்தாற்போல் விளையாடாத அந்த அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து 103, சுப்மன் கில் சதம் விளாசி 110, அறிமுகப் போட்டியில் தேவதூத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 ரன்கள் அடித்து ஆரம்பத்திலேயே நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மாபெரும் சாதனை:
அதைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா 15, துருவ் ஜுரேல் 15, அஸ்வின் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்ததால் இந்தியா 500 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3வது நாள் காலையிலேயே குல்தீப்பை 30 ரன்களிலும் பும்ராவை 20 ரன்களிலும் அவுட்டாக்கிய இங்கிலாந்து பவுலர்கள் இந்தியாவை குறைந்தபட்சம் 500 ரன்கள் தொடவிடாமல் 477 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.

அந்த அணிக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 டாம் ஹார்ட்லி 2 ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த போட்டியில் எடுத்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் உலக சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார். ஆரம்பத்தில் சாதாரண பவுலராகவே விளையாடி வந்த அவர் நாளடைவில் அனுபவத்தால் முன்னேறி உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து விக்கெட்டுகளை அள்ளி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக 41 வயதை கடந்தும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய அபாரமான ஃபிட்னஸ் பயன்படுத்தி எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து வரும் அவர் இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோருக்குப் பின் 700 விக்கெட்டுகள் எடுத்த 3வது பவுலர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். வரும் ஜூலை மாதம் 42 வயதை தொடும் அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: அது தான் ஐபிஎல் தொடரின் மேஜிக்.. இதெல்லாம் ஐசிசி தொடரில் ஆடும் போது கூட கிடைக்காது.. விராட் கோலி

ஆனால் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று கடந்த 2 வருடங்களாகவே தெரிவித்து வரும் அவர் அடுத்த ஆஷஸ் தொடரிலும் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. எனவே 800 விக்கெட்டுகளை எடுத்த இலங்கையின் முத்தையா முரளிதரனை முந்துவது கடினம் என்றாலும் 708 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஷேன் வார்னே சாதனையை உடைக்காமல் ஆண்டர்சன் நிற்க மாட்டார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement