அது தான் ஐபிஎல் தொடரின் மேஜிக்.. இதெல்லாம் ஐசிசி தொடரில் ஆடும் போது கூட கிடைக்காது.. விராட் கோலி

Virat Kohli 3
- Advertisement -

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 2024 சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்க உள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஃப் டு பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.

இம்முறை கோப்பையை வெல்வதற்காக களமிறங்கும் 10 அணிகளில் பெங்களூரு வழக்கம் போல தங்களுடைய முதல் கோப்பையை முத்தமிடும் லட்சியத்துடன் விளையாட உள்ளது. அந்த அணிக்கு 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்து மாபெரும் சாதனை படைத்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி இம்முறையும் சிறப்பாக விளையாடி முதல் சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

ஐபிஎல் மேஜிக்:
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த புது புது வீரர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பு ஐபிஎல் தொடரில் மட்டுமே கிடைப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அது போன்ற வாய்ப்பு தேசிய அணிக்காக ஐசிசி தொடர்களில் விளையாடும் போது கூட கிடைப்பதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“ஐபிஎல் தொடரை நான் முற்றிலுமாக விரும்புகிறேன். ஏனெனில் அது உங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லாத வீரர்கள், நீண்ட காலமாக உங்களுக்கு தெரிந்த பல வெளிநாட்டு வீரர்கள் மற்றும் புதுமுக வீரர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. அந்த வகையில் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒரு வகையான இணைப்பை ஏற்படுத்துவதாலேயே ஐபிஎல் தொடரை அனைவரும் விரும்புகின்றனர்”

- Advertisement -

“நீங்கள் ஒரு அணிக்காக மற்ற அணிகளுக்கு எதிராக அனைத்து தொடர்களிலும் விளையாடுவீர்கள். ஐசிசி தொடர்களும் தற்போது ஒவ்வொரு வருடமும் வருகிறது. ஆனால் ஐசிசி தொடரில் கூட நீங்கள் மற்ற வீரர்களுடன் அடிக்கடி பேசும் வாய்ப்பை பெற மாட்டீர்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியையும் நீங்கள் 2 அல்லது 3வது நாளில் சந்திப்பீர்கள். அதுவே ஐபிஎல் தொடரின் அழகாகும்”

இதையும் படிங்க: பட் கமின்ஸ்க்கு 20.50 கோடி கொடுத்த நீங்க.. அவரை ஏன் வாங்கல? ஐபிஎல் அணிகள் மீது ஆகாஷ் சோப்ரா ஏமாற்றம்

“மேலும் அந்தத் தொடரில் நீங்கள் பல்வேறு நகரங்களில் பல்வேறு அணிகளுக்கு எதிராக வித்தியாசமான சூழ்நிலைகளில் விளையாடுவீர்கள். அந்தத் தொடரின் பல்வேறு நிலைகளில் அனைவரும் வெவ்வேறு விதமான தகவல்களை கொண்டிருப்பார்கள். அதனாலேயே ஐபிஎல் தொடரில் மேஜிக் நிறைந்த தருணங்கள் உருவாக்கப்படுகின்றன” என்று கூறினார். முன்னதாக நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக விலகிய விராட் கோலி 2024 ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement