பட் கமின்ஸ்க்கு 20.50 கோடி கொடுத்த நீங்க.. அவரை ஏன் வாங்கல? ஐபிஎல் அணிகள் மீது ஆகாஷ் சோப்ரா ஏமாற்றம்

Aakash Chopra 24
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 1* என்ற கணக்கில் 4 போட்டிகளின் முடிவிலேயே இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் மும்பையை சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்குப் பின் இந்தியாவுக்காக அறிமுகமாக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக அறிமுக இன்னிங்சிலேயே 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்தார். மேலும் அந்தப் போட்டியில் 62, 68 ரன்கள் அடித்த அவர் அறிமுகப் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் அரை சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

- Advertisement -

ஐபிஎல் வாய்ப்பு இல்லையே:
அதைத் தொடர்ந்து 4வது போட்டியில் தடுமாறினாலும் தரம்சாலாவில் நடைபெற்று வரும் 5வது போட்டியில் மீண்டும் அதிரடியாக விளையாடிய அவர் 50 பந்துகளில் அரை சதமடித்து 8 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (60) ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே ஓரளவு அதிரடியாக விளையாடும் சர்பராஸ் கானை அடுத்த சில வாரங்களில் துவங்கும் ஐபிஎல் 2024 தொடரில் எந்த அணியும் வாங்காதது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

குறிப்பாக பட் கமின்ஸை 20.50 கோடிக்கு ஐபிஎல் அணிகள் இவரை அடிப்படை விலைக்கு கூட வாங்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஆகாஷ் சோப்ரா இது பற்றிய தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பட் கமின்ஸ் 20.50 கோடி ரூபாய்களுக்காக வாங்கப்பட்டது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது அல்லது நான் ஆச்சரியமடைந்தேன் என்று சொல்ல மாட்டேன்”

- Advertisement -

“உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகள் தான் ஏலத்தில் ஒரு தலைபட்சமாக தேர்வு செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால் ஒருவேளை நாளை ஏலம் நடந்தால் சர்பராஸ் கானுக்கு ஒப்பந்தம் கிடைக்கலாம். இருப்பினும் ஏலம் என்பது நீங்கள் கடந்த 5 – 8 வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். அப்படி பார்க்கும் போது 18 வயதிலிருந்தே ஐபிஎல் தொடரில் 2 – 3 அணிகளுக்காக சர்பராஸ் விளையாடியுள்ளார்”

இதையும் படிங்க: இந்திய வீரர்கள் மாதிரி இல்லாமல் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் எடுத்த அதிரடி முடிவு – வியப்பில் ரசிகர்கள்

“உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் அவருக்கு ஐபிஎல் தொடரில் நிறைய வாய்ப்புகள் கிடைத்ததில்லை. அதே சமயம் அவரை ஏலத்தில் வாங்காததால் யாரும் ஆச்சரியமும் படவில்லை. அதனாலேயே யாரும் அதைப்பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் தற்போது பட் கமின்ஸ் உலகக் கோப்பையை வென்றது போல நாம் பேசுவதற்கு தகுதியான அளவுக்கு சர்பராஸ் கான் அங்கேயும் இங்கேயும் அசத்தி வருகிறார்” என்று கூறினார்.

Advertisement