இந்திய வீரர்கள் மாதிரி இல்லாமல் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் எடுத்த அதிரடி முடிவு – வியப்பில் ரசிகர்கள்

Wade
- Advertisement -

இந்தியாவில் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கிறது. அதன்படி மார்ச் 22-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஐபிஎல் தொடர் என்றாலே பணம் கொழிக்கும் இடமாக பார்க்கப்படும் வேளையில் சர்வதேச போட்டிகளை தாண்டி ஐபிஎல் தொடரில் விளையாட அனைவருமே ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் இளம் வீரர்கள் சிலர் சர்வதேச போட்டிகளை காட்டிலும் ஐபிஎல் போட்டிக்கு முன்னுரிமை அளித்து வருவதையும் பார்க்க முடிகிறது. அதனால் ஐபிஎல் தொடர்காக அவர்கள் மும்முரமாகவும் தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரை விட தங்களது நாட்டில் நடக்கும் உள்ளூர் தொடர் முக்கியம் என்று ஏற்கனவே பல வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரையும் புறக்கணித்து உள்ளூர் தொடர்களில் விளையாடி இருக்கின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மேத்யூ வேட் கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்துள்ளார்.

இம்முறையும் அவர் குஜராத் அணியில் இடம் பெற்று இருக்கும் வேளையில் ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் உள்ளூர் தொடரில் தனது மாநில அணியில் விளையாடுகிறார். அதாவது மார்ச் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரில் இறுதிப்போட்டியில் அவர் டாஸ்மானியா அணிக்காக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

அதன் காரணமாக அவர் மார்ச் 25-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும், மார்ச் 27-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து அவர் இந்தியா வந்தடைந்து குஜராத் அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து டாஸ்மானியா அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : வேட் தனது ஐபிஎல் அணியுடன் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க : இந்த ஒரு இன்னிங்ஸ் போதும் தேவ்தத் படிக்கல் எப்படிப்பட்ட வீரர்னு சொல்ல – அவரோட இந்த பிளஸ் போதும்

மேலும் அவர்களும் அவரை எங்கள் அணியுடன் விளையாட விடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதன்பிறகு அவர் இந்தியா வந்து குஜராத் அணியுடன் இணைவார் என்றும் அந்த அணியின் நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. இப்படி இந்திய வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரே முக்கியம் என்று நினைக்கும் வேளையில் மேத்யூ வேட் ஐபிஎல்-ஐ விட உள்ளூர் போட்டி முக்கியம் என்று நினைத்துள்ளது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement