இந்த ஒரு இன்னிங்ஸ் போதும் தேவ்தத் படிக்கல் எப்படிப்பட்ட வீரர்னு சொல்ல – அவரோட இந்த பிளஸ் போதும்

Padikkal
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி சார்பாக இளம் இடதுகை ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல்லுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்த தொடரில் நான்கு வீரர்கள் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்த வேளையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது இந்திய வீரராக படிக்கல் அறிமுகமானார்.

அந்த வகையில் தனக்கு கிடைத்த இந்த முதல் வாய்ப்பிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடும்போது நான்காவது வீரராக களமிறங்கியது மட்டுமின்றி 103 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 65 ரன்கள் குவித்து அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் இன்னிங்சில் முதல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நான்காவது வீரராக ரோஹித் சர்மா ஆட்டம் இழந்ததும் களத்திற்குள் வந்த படிக்கல் அடுத்தடுத்து சுப்மன் கில் மற்றும் சர்பராஸ் கானுடன் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த இன்னிங்ஸ் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது.

அதிலும் குறிப்பாக அவர் அடித்த அந்த 65 ரன்களில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என பவுண்டரி கணக்குகளை மட்டும் எடுத்தால் 46 ரன்களையும், அதுதவிர்த்து 19 ரன்களை அவர் ஓடியும் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : 11 பந்துகளில் 46 ரன்கள் கிடைத்து இருந்தாலும் மீதி 19 ரன்களை எடுக்க அவர் கிட்டத்தட்ட 92 பந்துகளை சந்தித்து அடித்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுண்டரிகள் எளிதாக கிடைத்தாலும் சரியான பந்துகளுக்கு மரியாதை கொடுத்து பொறுமையுடன் விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் படிக்கல் மிகச்சிறப்பான தடுப்பாட்டத்தை விளையாடி ஸ்ட்ரைக் ரொட்டேஷனையும் செய்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிவாகியுள்ளது.

இதையும் படிங்க : 3 பக்கமும் இங்கிலாந்துக்கு அடி.. இந்தியாவுக்காக 92 வருடங்களில் நிகழாத சாதனையை செய்த ஜெய்ஸ்வால், ரோஹித், கில்

ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் இல்லாமல் இருந்து வரும் வேளையில் தற்போது நான்காவது இடத்திற்கான அவரது வருகை இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பலத்தை சேர்த்துள்ளது. விராட் கோலி வந்தால் அந்த இடம் பறிபோகும் என்றாலும் இனிவரும் காலத்தில் அவரை தொடர்ச்சியாக பயன்படுத்தி நிரந்தர வீரராக மாற்றும் அளவிற்கு இந்த ஒரு இன்னிங்ஸ் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement