நல்ல டேலன்ட் இருந்தும். சஞ்சு சாம்சன் இப்படி சேன்ஸ் கிடைக்காம கஷ்டப்பட இதுவே காரணம் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
Advertisement

கேரளாவை சேர்ந்த 27 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் இதுவரை 138 போட்டிகளில் பங்கேற்று 3500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டனாக வழி நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது அபரிவிதமான திறமைக்கு எப்போதே இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வரும் வேளையில் 27 வயதான அவர் இன்றளவும் இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வருகிறார்.

Samson

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 13 டி20 போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனாலும் ஐபிஎல் தொடர் போன்று அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு தேசிய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் வெகு நாட்கள் காத்திருப்புக்கு பிறகு தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹார்டிக் பண்டியா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சன் விளையாட இருப்பதால் அவரது மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

samson

இந்நிலையில் இந்திய அணியில் இவ்வளவு திறமை இருந்தும் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக இடம் பிடிக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் ஆட்டம் மிகப் பிரமாதமாக இருந்தும் அவர் இந்திய அணிக்காக விளையாடும் போது சீரற்ற முறையில் விளையாடியதே வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதுவரை இந்திய அணியில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது. அவரது ஷாட் தேர்வில் அவர் இன்னும் கவனத்தை அதிகரிக்க வேண்டும். ஏனெனில் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முதல் ஷாட்டை அருமையாக விளையாடி விட்டு அதன் பிறகு மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இப்படி ஒரு பந்தில் நல்ல ஷாட்டை விளையாடி விட்டு அடுத்த பந்திலேயே மோசமான ஷாட்டை ஆடி அவர் வெளியேறி செல்வதால் அவரிடம் நிலையான ஆட்டம் இருந்ததில்லை.

இதையும் படிங்க : IND vs ENG : தமிழக நட்சத்திர வீரருக்கு கரோனா, இங்கிலாந்து டெஸ்டில் பங்கேற்பதில் சிக்கல் – ரசிகர்கள் கவலை

பேட்டிங்கில் பெரிய ரன்குவிப்பிற்கு செல்லும் நிலைப்பாடு இல்லாமல் போனதாலே அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய ஷாட் தேர்வு சிறப்பாக அமைந்து பெரிய ரன் குவிப்பிற்கு சென்றால் நிச்சயம் அவருக்கு இந்திய தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் என்று கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement