IND vs ENG : தமிழக நட்சத்திர வீரருக்கு கரோனா, இங்கிலாந்து டெஸ்டில் பங்கேற்பதில் சிக்கல் – ரசிகர்கள் கவலை

Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்தியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியினர் அதற்காக அஞ்சாமல் அடுத்த 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தனர். அந்த நிலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது போட்டி 21 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஏறக்குறைய தென் ஆப்ரிக்க தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1-ஆம் தேதி கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

- Advertisement -

பறந்த இந்தியா:
பர்மிங்காமில் நடைபெறும் அந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஜூன் 24 – 27 வரை லெய்ஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியிலும் இந்தியா விளையாட உள்ளது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது. எனவே அந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தற்போது அங்கு தீவிரமான வலை பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற இந்திய டெஸ்ட் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் மூத்த சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறவில்லை என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு நிகழ்த்தப்பட்ட வழக்கமான கரோனா சோதனையில் அஷ்வினுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மட்டும் இந்திய அணியுடன் செல்லாமல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். அவரைத் தவிர பராஸ் மாம்ரே, விக்ரம் ரத்தோர் போன்ற பயிற்சியாளர்கள் அடங்கிய அனைவரும் இந்திய அணியுடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

- Advertisement -

அஷ்வினுக்கு சிக்கல்:
மேலும் தென் ஆப்பிரிக்க தொடரை முடித்துவிட்டு ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் அயர்லாந்து போட்டியில் பங்கேற்பதற்காக விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அயர்லாந்துக்கு பறக்க உள்ளது. அதற்குள் அஷ்வின் குணமடைந்து விட்டால் அவருடன் இங்கிலாந்துக்கு அதே விமானத்தில் செல்வார் என்று தெரிவிக்கும் செய்திகள் எப்படி இருந்தாலும் ஜூன் 24இல் துவங்கும் லெய்ஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கிறது.

இது பற்றி பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “கரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்திய அணியினருடன் அஷ்வின் இங்கிலாந்துக்கு புறப்படவில்லை. ஆனால் ஜூலை 1இல் துவங்கும் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் குணமாகி விடுவார் என்று நம்புகிறோம். இருப்பினும் லெய்ஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று நினைக்கிறோம்” என்று கூறினார். இதை ராஜஸ்தான் அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

- Advertisement -

என்ன காரணம்:
இதனால் தமிழக மற்றும் இந்திய ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ஏனெனில் கடந்த பல வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் நம்பர்-1 சுழல் பந்து வீச்சாளராக வலம் வரும் அவர் இந்த போட்டியில் பங்கேற்காமல் போனால் இந்தியாவுக்கு அது நிச்சயமாக பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அந்த போட்டி துவங்க இன்னும் ஒரு வாரம் உள்ளதால் அதற்குள் அவர் குணமடைந்து இந்திய அணியுடன் இணைந்து விடுவார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : IND vs ENG : இங்கிலாந்து டெஸ்டில் காயமடைந்த ராகுலுக்கு பதில் ஓப்பனிங் இவர்தான் – பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு இதோ

ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானுக்காக விளையாடிய அவர் நடைபெற்று முடிந்த தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெறவில்லை. ஆனாலும் தனது சொந்த ஊரான சென்னையில் நடந்த ஒரு கிளப் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற அவர் தனது அணி சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார். ஒருவேளை கட்டுப்பாடின்றி அந்த தொடரில் விளையாடியது தான் அவரின் இந்த நிலைமைக்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement