IND vs ENG : இங்கிலாந்து டெஸ்டில் காயமடைந்த ராகுலுக்கு பதில் ஓப்பனிங் இவர்தான் – பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு இதோ

Rahul
Advertisement

ஐபிஎல் 2022 தொடரை முடித்துவிட்டு சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமனில் நிறைவு பெற்றுள்ளது. ஜூன் 9இல் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியாவின் மோசமான பந்து வீச்சை சரமாரியாக அடித்த தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியினர் தோல்விகளுக்கு அஞ்சாமல் அதற்கடுத்த 2 போட்டிகளில் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சூப்பராக செயல்பட்டு பெரிய வெற்றிகளை சுவைத்து தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

அதனால் 2 – 2 என சமனில் இருந்த அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது போட்டி ஜூன் 19இல் பெங்களூருவில் நடைபெற்றது. மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் 21 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை வந்ததால் அந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அந்த தொடர் சமனில் முடிந்து இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட்:
இந்த தொடருக்குப் பின் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. அதன்பின் ஜூலை 1-ஆம் தேதி கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. அதில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, புஜாரா போன்ற முதன்மை வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே அதன் கடைசி போட்டியிலும் வென்று இங்கிலாந்து மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஏற்கனவே அங்கு சென்று தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்பாக ஜூன் 24 முதல் 27 வரை லெய்ஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான 4 நாட்கள் பயிற்சி போட்டியில் இந்தியா பங்கேற்க உள்ளது.

- Advertisement -

விலகிய ராகுல்:
முன்னதாக இந்த தொடரில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட அணியில் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் கேஎல் ராகுல் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் கேப்டனாக செயல்பட இருந்த நிலையில் தொடர் துவங்க ஒருநாள் முன்பாகவே வலை பயிற்சியின்போது காயமடைந்து மொத்தமாக வெளியேறினார். அவரின் காயம் பெரிதாக இருப்பதால் இந்த இங்கிலாந்து டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவித்த பிசிசிஐ அவருக்கான மாற்று வீரரை அறிவிக்காததால் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி நிலவி வருகிறது.

Rahul

இந்த நிலைமையில் ஜூன் 24இல் நடைபெறும் லெய்ஸ்ஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பகிர்ந்துள்ள பிசிசிஐ “இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் நாள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்” என்று தலைப்பிட்டுள்ளது. அதனால் இங்கிலாந்து டெஸ்டில் ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

- Advertisement -

சூப்பர் ஜோடி:
இவர்கள் ஏற்கனவே கடந்த 2021இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த இவர்கள் 70, 71 என 2 இன்னிங்சிலும் சூப்பரான ஓபனிங் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர்.

இதையும் படிங்க : எனது அந்த நிலைமைக்கு பாகிஸ்தான் தான் காரணம் – வேதனையை பகிரும் இங்கிலாந்து நட்சத்திர வீரர்

அதேபோல் பிரிஸ்பேன் நகரில் நடந்த 4-வது போட்டியில் முதல் இன்னிங்சில் ரோஹித் சர்மா 44 ரன்களும் 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் 91 ரன்களும் எடுத்து 32 வருடங்களுக்கு பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்து 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் தொடரை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement