எனது அந்த நிலைமைக்கு பாகிஸ்தான் தான் காரணம் – வேதனையை பகிரும் இங்கிலாந்து நட்சத்திர வீரர்

Roy
Advertisement

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. ஜூன் 14இல் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் 498 ரன்கள் விளாசி நெதர்லாந்தை வதம் செய்த இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து உலக சாதனை படைத்து அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜூன் 19இல் நடைபெற்ற 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

NED vs ENG Buttler

இந்த தொடரில் இங்கிலாந்தின் நட்சத்திர தொடக்க வீரர் ஜேசன் ராய் மீண்டும் அந்த அணிக்குத் திரும்பியுள்ளார். முதல் போட்டியில் 1 ரன்னில் அவுட்டான அவர் 2-வது போட்டியில் நெதர்லாந்து நிர்ணயித்த 236 ரன்கள் இலக்கை துரத்தும் போது தொடக்க வீரராக களமிறங்கி 13 பவுண்டரி 1 சிக்சருடன் 73 (60) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இங்கிலாந்து அணியில் சூப்பரான கம் பேக் கொடுத்துள்ளது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் பிரேக்:
இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தொடக்க வீரராக விளையாட ஏலத்தின்போது 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தொடர் துவங்க ஒரு வாரம் முன்பாக திடீரென அவர் விலகுவதாக அறிவித்தது குஜராத் நிர்வாகத்துக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருந்து விளையாடியதால் மனதளவில் சோர்ந்து போனதாக தெரிவித்த அவர் அதை சரி செய்வதற்கு தனது குடும்பத்தினருடன் சிலமாதங்கள் நேரத்தை செலவழிக்க விரும்புவதால் அந்த முடிவை எடுத்ததாக டுவிட்டரில் அறிவித்திருந்தார்.

- Advertisement -

இருப்பினும் ரிதிமான் சஹா – கில் ஆகிய தொடக்க வீரர்களை வைத்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டியது. அந்த நிலைமையில் சுமார் இரண்டரை மாதங்கள் ஓய்வு எடுத்த ஜேசன் ராய் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 ப்ளாஸ்ட் தொடரின் வாயிலாக கிரிக்கெட்டுக்கு திரும்பினார். அதில் அசத்தலாக செயல்பட்ட அவர் தற்போது இங்கிலாந்துக்காகவும் விளையாட துவங்கியுள்ளார்.

பிஎஸ்எல் காரணம்:
இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் டி20 தொடரில் விளையாடிய போது பல அம்சங்கள் தாம் விரும்பாத வகையில் அமைந்ததே தனது மனநிலை பாதிக்க காரணமாக அமைந்ததாக ஜேசன் ராய் தற்போது தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பிஎஸ்எல் தொடரில் விளையாடிய போது நிறைய அம்சங்கள் மனதளவில் எனக்கு சரியாக அமையவில்லை. நான் ஒரு வித்தியாசமான இடத்தில் இருந்தேன். ஏனெனில் நான் நல்ல கிரிக்கெட் விளையாடினேன். ஆனால் மனதளவில் நான் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அந்த தருணங்கள் எனக்கு இருண்ட நேரமாக அமைந்தது. அதன்பின் வீட்டுக்கு திரும்பி ஒரு சில மாதங்கள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த பின்பே சீராகியுள்ளேன்” என்று கூறினார்.

roy 1

- Advertisement -

அதாவது பாகிஸ்தானில் நடந்த பிஎஸ்எல் தொடரின்போது ஹோட்டலில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்ட தருணங்கள் இருண்ட உலகத்தில் வாழ்ந்ததைப் போல் உணர்ந்ததாக தெரிவிக்கும் ஜேசன் ராய் அதிலிருந்து வெளிவந்து 2 மாதங்கள் ஓய்வெடுத்த பின்பு தான் தற்போது மன நிலைமை சீராகி சரியாகி உள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

“50 நாட்களுக்கும் மேலாக தனிமை படுத்தப்பட்டு ஹோட்டலில் இருந்தது கடினமாக இருந்தது. ஜனவரியில் குழந்தை பிறந்த போதும் வெளியில் நேரத்தை செலவிட்டது அதிகப்படியான மன அழுத்தத்தை கொடுத்தது. அதற்கு முடிவு கட்டவே ஐபிஎல் தொடரையும் தவறவிட்டு வீட்டுக்கு சென்று குடும்பத்தினருடன் இருந்து உடலையும் மனதையும் புத்துணர்ச்சி செய்து கொண்டேன்”

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த – இர்பான் பதான் (லிஸ்ட் இதோ)

“எனவே கடினமான தருணங்களை தாண்டி மீண்டும் இங்கு திரும்பியுள்ளது மனதிற்கு இதமாக உள்ளது. தற்போது ஒவ்வொரு நிமிடமும் நல்லபடியாக உணர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடும் போட்டிக்கு திரும்பியுள்ளது நிம்மதியாக உள்ளது” என்று கூறினார். சமீப காலங்களில் கிளன் மேக்ஸ்வெல், பென் ஸ்டோக்ஸ் போன்ற நிறைய நட்சத்திரங்கள் இதுபோன்ற கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருப்பது மனதை பாதிப்பதாக தெரிவித்து இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement