டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த – இர்பான் பதான் (லிஸ்ட் இதோ)

Pathan-1
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணியானது கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் அற்புதமான வெற்றிகளை குவித்து வெற்றிநடை போட்டு வருகிறது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை அடுத்து மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை ரிஷப் பண்ட் தலைமை தாங்கினார். இருப்பினும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை வழிநடத்த உள்ள ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்படும் என்று என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலிய மண்ணில் துவங்கும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஒரு சில டி20 தொடர்களில் மட்டுமே விளையாட உள்ளதால் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து அணியை பலமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரது முடிவாகும் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவனை பல்வேறு முன்னாள் வீரர்களும் கணித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் உலக கோப்பை தொடரில் விளையாடப்போகும் சிறந்த பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அந்த வீரர்களின் பட்டியலில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் இருவரே துவக்க வீரர்களாகவும் விளையாடுவார்கள். மிடில் ஆர்டரில் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா போன்றோரும், விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட்டை புறக்கணித்து உள்ள பதான் தினேஷ் கார்த்திக்கை சேர்த்துள்ளார்.

அவரது இந்த தேர்வு தற்போது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா மற்றும் சாஹல் ஆகியவை தேர்வு செய்துள்ள பதான் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியவை தேர்வு செய்துள்ளார். இவர் தேர்வு செய்துள்ள இந்திய அணி மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

- Advertisement -

அதோடு இந்த பிளேயிங் லெவன் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் பினிஷராக தினேஷ் கார்த்திக்கை அவர் தேர்வு செய்துள்ளது மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது உள்ள சூழலில் ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பான பார்மில் உள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் கட்டாயம் உலகக் கோப்பையில் அவர் அசத்துவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இர்பான் பதான் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்திய அணியில் விளையாடனுனா மொதல்ல இதை செய்யுங்க – திவாடியாவுக்கு தெ.ஆ ஜாம்பவான் ஆலோசனை

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்சல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா.

Advertisement