இந்திய அணியில் விளையாடனுனா மொதல்ல இதை செய்யுங்க – திவாடியாவுக்கு தெ.ஆ ஜாம்பவான் ஆலோசனை

Tewatia
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் கடந்த 10 நாட்களாக விளையாடி வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஜூன் 9 முதல் டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் அதற்காக பின்வாங்காமல் அதற்கடுத்த 2 போட்டிகளில் மாஸ் காட்டிய இந்தியா பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கச்சிதமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று சொந்த மண்ணில் சுலபமாக தோற்க மாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவை பதிலடி கொடுத்தது.

அதனால் 2 – 2 என சமனடைந்த இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது போட்டி ஜூன் 19 இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்றது. மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.50 மணிக்கு தாமதமாக துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 3.3 ஓவரில் 28/2 என தடுமாறிக் கொண்டிருந்தபோது மீண்டும் வந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து நொறுக்கியது. அதனால் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அம்பயர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இரு அணிகளும் இத்தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

- Advertisement -

இளம் வீரர்கள்:
முன்னதாக இந்த தொடரில் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் அற்புதமாக செயல்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் பந்துவீச்சில் மிரட்டிய உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் அதே ஐபிஎல் தொடரில் அசத்திய ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது பல முன்னாள் வீரர்களின் கேள்வியும் ரசிகர்களின் கோபத்தையும் ஏற்படுத்தியது. அதில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணிக்காக விளையாடிய ராகுல் திவாடியா சிறப்பாக விளையாடிய போதிலும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று டுவிட்டரில் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

ஆனால் வாய்ப்பு பெற்றவர்களுக்கே இந்த தொடரில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற பரிதாப நிலைதான் இருந்தது. ஆம் முதல் 2 போட்டிகளில் மோசமான பந்து வீச்சு காரணமாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததன் காரணமாக 3-வது போட்டியில் உம்ரான் மாலிக் அல்லது அர்ஷிதீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் கடைசி போட்டி வரை மாற்றம் செய்யாத இந்திய அணி நிர்வாகம் முதல் போட்டியில் தேர்வு செய்தவர்களுக்கே கடைசிவரை வாய்ப்பு கொடுத்து.

- Advertisement -

செயல்ல காட்டுங்க:
இந்நிலையில் டுவிட்டரில் மட்டும் பேசாமல் தேர்வுக் குழுவினரால் எந்த காரணத்தையும் சொல்லி ஒதுக்க முடியாத அளவுக்கு களத்தில் இரு மடங்கு சிறப்பாக செயல்படுமாறு திவாடியாவை தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியா போன்ற ஒரு இடத்திற்கு ஏராளமான வீரர்கள் போட்டி போடும் அணியில் அனைத்து வீரர்களையும் தேர்வு செய்ய முடியாது என்பதால் ஒதுக்க முடியாத அளவுக்கு அடுத்த முறை சிறப்பாக செயல்படுமாறு தெரிவித்த அவர் இது பற்றி தொடர் முடிந்த பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“உங்களிடம் ஏராளமான திறமையானவர்கள் உள்ளதால் இந்தியாவுக்கு விளையாடுவது கடினமாகும். மேலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய கால சூழ்நிலைக்கேற்ற வீரர்களை தான் தேர்வு செய்ய முக்கியத்துவம் அளிப்பார்கள். எனவே ட்விட்டரில் பேசாமல் அடுத்த முறை உங்களைப் போன்ற யாரையும் ஒதுக்க முடியாத அளவுக்கு களத்தில் சிறப்பாக செயல்பட கவனத்தை செலுத்துங்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த 2014 முதல் ஐபிஎல் தொடரில் யாரென்ற அடையாளமே தெரியாமல் சுமாராக செயல்பட்டு வந்த ராகுல் திவாடியா 2020 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் சாத்தியமற்ற வெற்றியை ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து எதிர்பாராத பெற்றுக்கொடுத்தார். அதனால் ரசிகர்களிடையே புகழ் பெற்ற அவர் 2021இல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவுக்காக விளையாட முதல் முறையாக வாய்ப்பு பெற்றார்.

ஆனால் அதில் பெஞ்சில் மட்டுமே அமர்ந்திருந்த அவரை அதன்பின் இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் மீண்டும் அதே பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து சூப்பர் வெற்றியை கொடுத்து குஜராத் அணிக்காக 16 போட்டிகளில் 217 ரன்களை எடுத்தார்.

இதையும் படிங்க : IND vs RSA : ஆஹா என்னா மனசுயா – ரசிகர்களுக்காக ரூல்சை மாற்றிய கர்நாடக கிரிக்கெட் வாரியம், குவியும் பாராட்டு

ஆனாலும் மொத்தமாக இதுவரை 2 – 3 போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ள இவர் தொடர்ச்சியாக அதை செய்து காட்ட தவறியதாலேயே அடுத்ததாக நடைபெறும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு பெறவில்லை என்பதே நிதர்சனம்.

Advertisement