IND vs RSA : ஆஹா என்னா மனசுயா – ரசிகர்களுக்காக ரூல்சை மாற்றிய கர்நாடக கிரிக்கெட் வாரியம், குவியும் பாராட்டு

IND vs RSA INd Fans Rain bengaluru Stadium
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் கடந்த 10 நாட்களாக மோதி வந்த பரபரப்பான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஜூன் 9இல் தலைநகர் டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெறித்தனமாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா உங்கள் ஊராக இருந்தாலும் திறமையாக செயல்பட்டால் தான் எங்களை தோற்கடிக்க முடியும் என்று இந்தியாவுக்கு சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்தது. ஆனால் அதற்காக அஞ்சாமல் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையிலும் மீண்டெழுந்த இந்திய அணியினர் அதற்கடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கச்சிதமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தனர்.

IND vs RSA Chahal Axar Patel

- Advertisement -

அதனால் சொந்த மண்ணில் நாங்களும் அவ்வளவு சுலபமாக வீழ்ந்து விட மாட்டோம் என்று மாஸ் கம்பேக் கொடுத்த இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து மிரட்டியது. அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் முக்கியமான பைனலை போன்ற மாபெரும் 5-வது போட்டி ஜூன் 19-ஆம் தேதி இரவு 7 மணிக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

தடுத்த மழை:
கடந்த போட்டியில் காயமடைந்த காரணத்தால் தெம்பா பவுமாக்கு பதில் தென்னாப்பிரிக்கா கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேசவராஜ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆனால் 7 மணிக்கு பேட்டிங் செய்ய இந்தியா தயாரான போது குறுக்கே வந்த மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டி ஒருவழியாக 7.50 மணிக்கு துவங்கியது. அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இந்தியாவுக்கு இஷான் கிசான் 15 (7) ருதுராஜ் 10 (12) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஏமாற்றியதால் 3.3 ஓவரில் 28/2 என தடுமாறிக் கொண்டிருந்தபோது மீண்டும் ஜோராக வந்த மழை வலுவாக பெய்தது.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

9 மணிக்கு மேல் சடசடவென கொட்டி தீர்த்த மழை மைதானம் முழுவதும் தண்ணீரால் நிரப்பி போட்டியை மொத்தமாக நிறுத்தியது. அதனால் எப்படியாவது நின்றுவிட வேண்டும் என்று பல நூறு ரூபாய்கள் செலவழித்து இப்போட்டியை நேரில் பார்க்க வந்த ரசிகர்கள் செய்த பிரார்த்தனைக்கு செவி சாய்க்காத மழை இரவு 10.10 மணி வரை அடித்து நொறுக்கியதால் வேறு வழியின்றி அடிப்படை விதி முறைப்படி இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் சமனில் இருந்த இந்த தொடரின் வெற்றியாளர்களாக இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு வெற்றிக் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

- Advertisement -

ரூல்ஸ் தாண்டி:
ஆனால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்ற ஆர்வத்துடன் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் சில ஆயிரங்களை செலவழித்து நேரில் பார்க்க வந்த பெங்களூரு ரசிகர்கள் போட்டி 90% கூட நடைபெறாத காரணத்தால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். இந்நிலையில் மழையால் இப்போட்டி முழுமையாக நடைபெறாத காரணத்தால் ரசிகர்களுக்கு அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டணத்தில் 50% திருப்பி அளிக்கப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Bengaluru Chinnasamy Cricket Ground Stadium

கர்நாடக கிரிக்கெட் வாரியத்தின் அடிப்படை விதி முறைப்படி ஒரு சர்வதேச போட்டியில் குறைந்தது ஒரு பந்து வீச பட்டால் கூட போட்டி கட்டணம் திருப்பி அளிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த போட்டி முழுமையாக நடைபெறவில்லை என்றாலும் 21 பந்துகள் வீசப்பட்டதால் கட்டணத்தை திருப்பி அளிக்கும்படி யாரும் கேட்க முடியாது. ஆனால் ரசிகர்கள் மீது அக்கறை காட்டியுள்ள கர்நாடக கிரிக்கெட் வாரியம் அவர்கள் அல்லாமல் மைதானம் அல்ல என்ற அக்கறையில் அடுத்த முறை போட்டி நடைபெறும் போது ஆர்வத்துடன் மீண்டும் மைதானத்துக்கு வந்து பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தில் 50% கட்டணத்தை திருப்பி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

- Advertisement -

குவியும் பாராட்டு:
அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அந்த அசல் டிக்கெட்டை வைத்துக்கொள்ளுமாறு அறிவித்துள்ள கர்நாடக கிரிக்கெட் வாரியம் அதற்கான இடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. இது பற்றி அம்மாநில கிரிக்கெட் வாரிய பொருளாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் வினய் ம்ருத்தயுஞ்சயா பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : எவ்ளோ சொதப்பினாலும் அவர் டி20 உ.கோ தொடர்ல ஆடுவாரு – உறுதியாக கூறும் ராகுல் டிராவிட்

“விதிமுறைப்படி ஒரு பந்து வீச பட்டாலும் கட்டணத்தை திரும்பப் பெறுவது பற்றி கேள்வி எழுப்ப முடியாது. இருப்பினும் கிரிக்கெட் ரசிகர்கள் மீது இருக்கும் அக்கறை காரணமாக கர்நாடக வாரியம் 50 சதவீத கட்டணத்தை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான இடம், தேதி, நேரம் போன்ற விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். எனவே டிக்கெட் வாங்கிய அனைத்து ரசிகர்களும் அசல் டிக்கெட்டை வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement