IND vs AUS : நல்லா செட்டாகியும் அவங்க 2 பேரும் செஞ்சுரி அடிக்காம போனது தப்பு – சுனில் கவாஸ்கர் வெளிப்படை

Gavaskar
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் வேளையில் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

IND

ஏனெனில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரது அசத்தலான சதம் காரணமாக 480 ரன்களை குவித்தது. பின்னர் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரது அற்புதமான சதம் காரணமாக 571 ரன்கள் குவித்து 91 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோர் சதம் அடிக்காதது தனக்கு வருத்தம் அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Pujara

ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் துவக்கத்தில் பந்துகளை சமாளித்து சிறப்பாக செட்டாகிவிட்டால் நிச்சயம் சதத்தை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோர் அதனை செய்யாததில் எனக்கு வருத்தம் தான். ஏனெனில் இருவருமே தங்களது பேட்டிங்கை மிகச் சிறப்பாக ஆரம்பித்து நல்ல நிலையில் செட் ஆகியிருந்தனர்.

- Advertisement -

ஆனாலும் ரோகித் சர்மா 35 ரன்களுடனும், புஜாரா 42 ரன்களுடனும் வெளியேறியதில் எனக்கு வருத்தம். இதுபோன்ற 30-40 ரன்களில் நன்றாக செட்டாகியிருக்கும் பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆட்டம் இழக்கக்கூடாது. 30-40 ரன்கள் கடந்த பின்னர் நிச்சயம் சதத்தை நோக்கி செல்ல வேண்டும், அந்த வகையில் அவர்கள் இருவரும் சதத்தை அடிக்காதது தனக்கு வருத்தம் என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs AUS : காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை தவறவிடவுள்ள – இந்திய வீரர்

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 128 ரன்கள் குவித்த வேளையில், விராட் கோலி 186 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதோடு மூன்றாண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28-வது சதத்தை அவர் பதிவுசெய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement