IND vs AUS : காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை தவறவிடவுள்ள – இந்திய வீரர்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

IND vs AUS

- Advertisement -

இந்த தொடரின் கடைசி போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ள வேளையில் இந்த போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதுகு பகுதியில் அசோகரித்தை உணர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அணி நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

Shreyas-Iyer

அதன் காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் போட்டியின் 4-ஆவது நாளில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. அதோடு கடைசி நாள் ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் இந்த டெஸ்ட் போட்டி முடிந்து அவர் சிகிச்சைக்கு செல்லும் பட்சத்தில் அவரால் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு ஏற்கனவே முகுது பகுதியில் காயம் ஏற்பட்டதை அடுத்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தான் அணியில் இணைந்தார்.

இதையும் படிங்க : IND vs AUS : இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணில் சவால் கொடுக்கும் நேதன் லயன் – 41 வருட சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மட்டுமின்றி எதிர்வரும் ஐபிஎல் தொடர் முழுவதையும் அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement