போதும் சாமி. புஜாரா, ரகானேவின் கதையை முடித்துவிட்டு இந்த 2 பேரை எடுங்க – சுனில் கவாஸ்கர் காட்டம்

Gavaskar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0 என தொடரில் முன்னிலை பெற்றது. ஆனாலும் கடைசி 2 போட்டிகளில் மோசமாக பேட்டிங் செய்த இந்தியாவை அபாரமாக பந்துவீசி அதிரச்செய்த தென் ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் அடுத்தடுத்த 2 வெற்றிகளை பெற்று 2 – 1 என தொடரை வென்றுள்ளது.

INDvsRSA

- Advertisement -

மீண்டும் ஏமாற்றம்:
விராட் கோலி தலைமையில் தரமான அனுபவ வீரர்களுடன் உலகின் நம்பர்-1 டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் கடைசி 2 போட்டிகளில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் வாழ்நாள் கனவு மீண்டும் தகர்ந்தது இந்திய ரசிகர்களை கடும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த தோல்விக்கு இந்தியாவின் மோசமான பேட்டிங் தான் மிக மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மிடில் ஆர்டரில் இடம் வகிக்கும் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் இந்த தொடரில் மீண்டும் ரன்கள் குவிக்க தவறியது இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்துள்ளது.

pujara 1

புஜாரா – ரகானே மோசம்:
கடந்த 2 வருடங்களாகவே மோசமான பார்ம் காரணமாக ரன்கள் குவிக்க திணறி வந்த இவர்களின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு மீண்டும் இந்த தொடரில் முழுமையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களோ இந்திய அணியில் தங்களது இடத்தை காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு மட்டுமே ரன்கள் குவித்தார்களே தவிர இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

- Advertisement -

இந்நிலையில் புஜாரா மற்றும் ரகானேவுக்கு கொடுத்த வாய்ப்பு போதும் இனி அவருக்கு பதில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என இந்தியாவின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.

Pujara

போதும் சாமி:
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசுகையில், “ரகானே மட்டுமல்ல தனது அறிமுக போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்ததை பார்த்தால் என்னைப் பொருத்தவரை இந்திய அணியில் 2 காலியிடங்கள் உள்ளது. அடுத்ததாக நடைபெறும் இலங்கை தொடரில் புஜாரா மற்றும் ரகானே இருவரும் நீக்கப்படுவார்கள். அந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் விஹாரி ஆகிய இருவருமே விளையாடுவார்கள், இதில் புஜாரா இடத்தில் ஷ்ரேயஸ் ஐயரும் ரகானே இடத்தில் விஹாரியும் விளையாடுகிறார்களா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -

எப்படி இருந்தாலும் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் கண்டிப்பாக உள்ளதாக எனக்கு தோன்றுகிறது என தெரிவித்தார். அவர் கூறுவது போல இந்த டெஸ்ட் தொடருக்கு பின் அடுத்ததாக வரும் மார்ச் மாதம் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதில் புஜாரா மற்றும் ரகானே நீக்கபடுவதை எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Iyer-2

சரியான நேரம்:
“இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கு சொந்த மண்ணில் நடக்கும் இலங்கை தொடரே மிகவும் சரியான தருணம். தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில் அல்லது விகாரி ஆகியோர் விளையாடி இருந்தாலும் கூட இதே கடினத்தை அவர்களும் எதிர் கொண்டு இருப்பார்கள். 2வது டெஸ்டில் விஹாரி மிகச் சிறப்பாக விளையாடினார் ஆனால் இதர 2 போட்டிகளில் பவுன்ஸ் அதிகமாக இருந்ததால் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இவர்களுக்கு வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும்”

இதையும் படிங்க : கையில் கிடைத்தும் வாய்க்கு எட்டாத சரித்திர வெற்றி. இந்தியாவை சாய்த்த தெ.ஆ – விவரம் இதோ

என இது பற்றி மேலும் கூறிய சுனில் கவாஸ்கர் அடுத்ததாக சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் அதில் புஜாரா மற்றும் ரஹானேவை நம்பாமல் அவர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்தியாவின் வருங்காலத்தை காப்பாற்ற இதுதான் சரியான நேரம் என வெளிப்படையாக கூறிவிட்டார்.

Advertisement