கையில் கிடைத்தும் வாய்க்கு எட்டாத சரித்திர வெற்றி. இந்தியாவை சாய்த்த தெ.ஆ – விவரம் இதோ

IND
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் கடந்த டிசம்பர் 26 அன்று செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக செஞ்சூரியன் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திரத்தை படைத்தது. இதை அடுத்து ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் மீண்டெழுந்த தென்ஆப்பிரிக்கா இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி மிகவும் சிறப்பாக செயல்பட்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1 – 1 என சமன் செய்தது.

INDvsRSA

- Advertisement -

அந்த போட்டி நடந்த இந்தியாவிற்கு ராசியான ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா தோல்வியை சந்தித்ததுடன் தொடரை முன்கூட்டியே கைப்பற்றும் வாய்ப்பையும் இழந்தது.

சுமார் பேட்டிங்:
இதை அடுத்து சமநிலை அடைந்த இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சுமாரான தொடக்கம் கொடுக்க அடுத்து வந்த புஜாரா தன் பங்கிற்கு 43 ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினார். அடுத்ததாக வந்த ரஹானேவும் ஏமாற்ற மறுபுறம் நங்கூரம் போல் விளையாடிய கேப்டன் விராட் கோலி 79 ரன்களில் முக்கியமான நேரத்தில் அவுட் ஆனதால் இந்தியா 223 ரன்கள் மட்டுமே எடுத்தது.

RSA

அபார பவுலிங்:
இதை அடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்காவை அதிரடியாகவும் துல்லியமாகவும் பந்துவீசி மடக்கிப் பிடித்த இந்திய பவுலர்கள் வெறும் 210 ரன்களுக்குள் சுருட்டி இந்தியாவிற்கு 13 ரன்கள் முன்னிலை பெற்று கொடுத்தார்கள். குறிப்பாக இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்த்து இப்போட்டியை இந்தியாவின் பக்கம் இழுத்து பிடித்து திருப்பினார்.

- Advertisement -

ஆனால் அதன் பயனை அனுபவிக்க முடியாமல் செய்த தென்ஆப்பிரிக்க பவுலர்கள் இந்திய பேட்டர்களை அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாக செய்தனர். இதனால் 58/4 என தவித்த இந்தியாவை மீட்க போராடிய விராட் கோலியும் 29 ரன்களில் அவுட்டானார்.

IND

தனி ஒருவன் பண்ட்:
அந்த நேரத்தில் தனி ஒருவன் போல பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனக்கே உரித்தான பாணியில் அதிரடியாக பேட்டிங் செய்து 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட சதம் அடித்து 100* ரன்கள் எடுத்தார். ஆனால் அவருக்கு மற்ற எந்த இந்திய வீரரும் ஆதரவு அளிக்காததால் இந்தியா வெறும் 198 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இறுதியில் 212 என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி போலவே மீண்டும் இந்திய பவுலர்களுக்கு எதிராக பொறுப்புடன் பேட்டிங் செய்து 3 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Rahane

தென்ஆப்பிரிக்கா வெற்றி:
இந்த வெற்றிக்கு 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 72 மற்றும் 82 ரன்கள் குவித்த “தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன்” விருதை வென்று அசத்தினார். இதன் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 1 என சொந்த மண்ணில் கைப்பற்றி தென்ஆப்பிரிக்கா அசத்தியது.

- Advertisement -

வாய்க்கு கிடைக்காத வெற்றி:
இந்த தோல்வியின் வாயிலாக “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஒரு தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இந்தியா கோட்டை விட்டுள்ளது” என்றே கூறலாம்.

இதையும் படிங்க : இந்திய அணியை எதிர்த்து இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் வெல்ல இதுவே காரணம் – டீன் எல்கர் மகிழ்ச்சி

ஏனென்றால் கடந்த 1992 முதல் அந்நாட்டில் ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வெல்லாத இந்தியா இந்த முறை விராட் கோலி தலைமையில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக புஜாரா, ரகானே, ராகுல், பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற உலகத்தரம் வாய்ந்த அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த வீரர்களுடன் களம் கண்டது. இதனால் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

ஆனால் எல்கர் தலைமையில் ரபாடா, நிகிடி போன்ற ஒரு சில அனுபவ வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு பீட்டர்சன், பவுமா, டுஷன், யான்சென் போன்ற நிறைய அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்து உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை அடுத்த 2 போட்டிகளில் சாய்த்த தென்னாப்பிரிக்கா இந்தியாவின் வெற்றியை திறமையால் தட்டிப் பறித்து விட்டது என்றே கூறலாம். இந்த தோல்வியால் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்திய ரசிகர்களின் கனவு மீண்டும் ஏமாற்றத்துடன் தொடர்கிறது.

Advertisement