இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நீக்கப்பட இதுதான் காரணம் – சுனில் கவாஸ்கர் விளக்கம்

Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றோடு வெளியேறியது. இதன் காரணமாக அடுத்து வரும் டி20 உலககோப்பையை-யாவது கைப்பற்ற வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையில் இந்திய அணி சீனியர் வீரர்களை கழற்றிவிட்டு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியையே டி20 அணியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற இலங்கை தொடருக்கான கேப்டனாக பாண்டியா அறிவிக்கப்பட்டு, சூரியகுமார் யாதவ் துணைக்கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

Hardik-Pandya

- Advertisement -

அதேவேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதேபோன்று தற்போது இலங்கை தொடரை முடித்த கையோடு இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது பெயர் இடம் பெறவில்லை.

இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் இனி டி20 அணி முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு பாண்டியா தலைமையில் தான் செயல்படும் என்று தெளிவாகியுள்ளது.

rohith

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது எதிர்காலம் என்ன என்பது குறித்தும், அவர்கள் ஏன் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போதைக்கு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர்கள் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

ஆனால் இதுவே அவர்களுக்கு முடிவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அதனை கணக்கில் கொண்டு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியிருக்கு ஓய்வளிக்கப்பட்டு இருக்கலாம். மேலும் இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

இதையும் படிங்க : எங்களோட இந்திய சிங்க பெண்களை கூட தாண்ட முடியாத நீங்க பேசலாமா? பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

அப்படி இந்த ஆண்டு அவர்களுக்கு சிறப்பாக அமையும் பட்சத்தில் மீண்டும் அவர்கள் டி20 அணியில் இடம் பெறலாம். இந்த வருடம் ஜூன் ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அந்த தொடரிலும் அவர்கள் இருக்க மாட்டார்கள் ஆனால் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் விளையாடும் டி20 கிரிக்கெட் தொடர்களில் அவர்கள் இடம்பெறவும் வாய்ப்பு உள்ளது என்று சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Advertisement