எங்களோட இந்திய சிங்க பெண்களை கூட தாண்ட முடியாத நீங்க பேசலாமா? பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

PSL WIPL
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் மாதம் கோடைகாலத்தில் கோளகாலமாக துவங்குகிறது. கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று தரத்திலும் பணத்திலும் ஐசிசியையும் உலகக்கோப்பையும் மிஞ்சி உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு அணிகளுக்கும் தரமான இளம் வீரர்களை கண்டறிந்து கொடுப்பதில் ஐபிஎல் சமீப காலங்களில் முக்கிய பங்காற்றி வருகிறது.

அப்படி இமயத்தை தொட்டுள்ள ஐபிஎல் தொடரை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நிறைய வெளிநாடுகளும் டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. இருப்பினும் அந்தத் தொடர்களால் ஐபிஎல் தொடரின் உச்சத்தை பாதி கூட தொட முடியாத நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 2016 முதல் பிஎஸ்எல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால் மற்ற நாடுகளை காட்டிலும் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் தரத்தில் சிறந்த உலகின் நம்பர் ஒன் டி20 தொடர் என்று பாகிஸ்தானை சேர்ந்த நிறைய முன்னாள் இந்நாள் வீரர்கள் அடிக்கடி விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

- Advertisement -

மிஞ்சிய மகளிர் ஐபிஎல்:
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணி ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக ஐபிஎல் தொடர் கருதப்படுகிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி மட்டும் இன்னும் ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. அதனால் மகளிர் ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த வேண்டும் என்று சமீப காலங்களாகவே நிலவும் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ 2023 முதல் மகளிர் ஐபிஎல் பெரிய தொடராக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் 2023 – 2027 வரை நடைபெறப் போகும் மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமை ஏலம் ஜனவரி 16ஆம் தேதியன்று நடைபெற்றது. அதில் 5 வருடத்திற்கான ஒளிபரப்பு உரிமையை வியாகாம்18 நிறுவனம் 951 கோடிக்கு வாங்கியுள்ளது. அதை பிசிசிஐ மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் அடுத்த 5 வருட காலத்தில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியின் சராசரி மதிப்பு 7.09 கோடியாகும்.

- Advertisement -

இது உலகின் நம்பர் ஒன் டி20 தொடர் என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மார் தட்டும் பிஎஸ்எல் தொடரை விட 2 மடங்கு அதிகமாகும். ஏனெனில் பிஎஸ்எல் தொடரின் தற்போதைய ஒளிபரப்பு ஒப்பந்தப்படி ஒரு போட்டியின் சராசரி மதிப்பு வெறும் 2.44 கோடியாகும். இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஆடவர் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியின் சராசரி மதிப்பான 107.5 கோடியை தான் உங்களால் ஏணி வச்சாலும் எட்ட முடியாது என்று பார்த்தால் எங்களது சிங்கப்பெண்கள் விளையாடப் போகும் மகளிர் ஐபிஎல் தொடரை கூட தாண்ட முடியவில்லை என்று சமூக வலைதளங்களில் பாகிஸ்தானை கலாய்த்து வருகிறார்கள்.

அதற்கு ஐபிஎல் 15 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது என்றும் 120 கோடி மக்கள் தொகை இந்தியாவில் இருப்பதால் 2016இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடருடன் ஒப்பிடுவதில் எந்த நியாயமும் இல்லை என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஆடவர் ஐபிஎல் தொடரை விடுங்கள் 2016லயே ஆரம்பிக்கப்பட்ட பிஎஸ்எல் தொடரால் இன்னும் உதயமே ஆகாத மகளிர் ஐபிஎல் தொடரை ஏன் தொட முடியவில்லை என்று அதற்கு மீண்டும் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் எழுச்சிக்கும் இந்தியாவின் சரிவுக்கும் அது தான் காரணம் – ஓப்பனாக பேசிய மொயின் அலி

அத்துடன் சமீப காலங்களாகவே நெருங்க முடியாது என்று தெரிந்தும் வேண்டுமென்றே தாமாக முன்வந்து ஐபிஎல் தொடருடன் பிஎஸ்எல் தொடரை நீங்கள் ஒப்பிடுவதாலேயே தற்போது நாங்கள் மகளிர் ஐபிஎல் தொடருடன் பிஎஸ்எல் தொடரை ஒப்பிடுகிறோம் என்றும் இந்திய ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். இதை தொடர்ந்து 2023 ஆடவர் ஐபிஎல் தொடருக்கு முன்பாக 5 அணிகளுடன் 22 லீக் போட்டிகளுடன் நடைபெறப் போகும் மகளிர் ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம். மேலும் விளையாடும் 11 பேர் அணியில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement